பொன் மகன் சேமிப்பு திட்டம் | Pon Magan Semippu Thittam in Tamil

Advertisement

பொன் மகன் சேமிப்பு திட்டம் | Pon Magan Semippu Thittam in Tamil

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2024 / Ponmagan semippu thittam: பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த பொன் மகன் சேமிப்பு திட்டம் (magan semippu thittam) குறிப்பாக ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, ‘பொன் மகன்’ சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதவாது ஆண் குழந்தைகளுக்காக, பொன் மகன்’ சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து. 1,50,000/- ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்., – மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 8.1% வட்டி அளிக்கப்படும். திட்டத்தில், இணைய வயது வரம்பு கிடையாது என்று கூறப்படுகிறது. சரி இங்கு பொன் மகன் சேமிப்பு திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமா..!

செல்வமகள் சேமிப்பு திட்டம்

பொன் மகன் சேமிப்பு திட்டம் 2024 – கணக்கு:

Pon magan semippu thittam:- தங்கள் மகனுக்கு இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் Account open செய்ய விரும்பும் பெற்றோர்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் Account open செய்யலாம்.

குறிப்பாக இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் Account open செய்த பிறகு, தமிழ்நாடு அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் Account-ஐ Transfer செய்து கொள்ளலாம்.

சேமிப்பு கணக்கை யார் பெயரில் தொடங்கலாம்:

Pon magan semippu thittam:- குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால், அந்த குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை துவங்கலாம்.

அதேபோல் குழந்தையின் வயது 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு சேமிப்பு (joint account) கணக்காக துவங்கலாம். அதாவது parents name + child name-யில் account open செய்ய வேண்டும்.

Account open செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

Pon magan semippu thittam:- இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்று பார்த்தால், தங்கள் ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், pan card மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் account open செய்வதற்கு தேவைப்படும்.

பொன் மகன் சேமிப்பு திட்டம் 8.1 சதவீதம் வட்டி:

இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.1% வட்டி வழங்கப்படும். இருப்பின் ஆண்டிற்கு ஆண்டு வட்டி விகிதம் என்பது மாறுபடும். எனவே தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

பொன் மகன் சேமிப்பு திட்டம் மாதத் தவணை:

Pon magan semippu thittam:- இந்த பொன் மகன் சேமிப்பு திட்டம் பொறுத்தவரை, ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து (1,50,000/-) ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்.

வயது வரம்பு கிடையாது:

இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது.

சேமிப்பு கணக்கின் காலம்:-

இந்த பொன் மகன் சேமிப்பு திட்டம் பொறுத்தவரை 15 ஆண்டுகள் வரை கணக்கை தொடங்கலாம், இந்த சேமிப்பு கணக்கில் போடப்படும் பணத்திற்கு நீங்கள் வரி செலுத்த தேவையில்லை.

15 ஆண்டுகள் வரை:

pon magan semippu thittam 2024:- கணக்கு தொடங்கியதில் இருந்து 7 ஆவது ஆண்டில் இருந்து 50% தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..! online services list in tamilnadu

முன்னாடியே பெற்றுக் கொள்ளலாம்:

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

உரிய காரணம் தேவை:

Pon magan semippu thittam: அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன் மகன் சேமிப்பு திட்டம் விவரம்:-

பொன்மகன் சேமிப்பு திட்டம் Calculator: பொன் மகன் சேமிப்பு திட்டம் அட்டவணை / மாதம் மாதம் நாம் செலுத்தும் தொகை இறுதியாண்டில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இந்த அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

*பொன் மகன் சேமிப்பு திட்டம் அட்டவணை
மாத முதலீடு  வருடத்திற்கு முதலீடு செய்யும் தொகை  மொத்த முதலீடு  முதிர்வு தொகை 
5,00.00 5,00.00 X 12 = 6,000.00 90,000.00 1,83,488.66
1,000.00 1,000.00 X 12 = 12,000.00 1,80,000.00 5,46,977.31
2,000.00 2,000.00 X 12 = 24,000.00 3,60,000.00 10,93,954.62
5,000.00 5,000.00 X 12 = 60,000.00 9,00,000.00 27,34,886.56
7,000.00 7,000.00 X 12 = 84,000.00 12,60,000.00 38,28,841.19
10,000.00 10,000.00 X 12 = 1,20,000.00 18,00,000.00 54,69,773.12
12,500.00 12,500.00 X 12 = 1,50,000.00 22,50,000.00 68,37,216.41

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement