மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

Advertisement

POMIS சேமிப்பு திட்டம்

பண கஷ்டம் என்பது எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் எப்படியாவது சேமிக்க வேண்டும் என்று எண்ணுவோம். சேமிக்க வேண்டும் என்னும் எண்ணம் அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? ஏதாவது ஒரு வகையில் நாம் சேமிப்பு இருக்க வேண்டும். நம்மிடம் பணம் இருக்கும் போது அதனை சரியான வழியில் சேமிப்பது சிறந்தது. அனைவருமே சேமிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அனைவருக்குமே கஷ்டமான காலம் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் நாம் சேமிக்கும் பணம் உதவும். அதனால் நீங்கள் சம்பாதிக்கும் போது அதில் ஒரு பகுதி பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நமக்கு சேமிப்பு என்றால் முதலில் நினைவு வருவது போஸ்ட் ஆபிஸில் தான் சேமிப்பகத்தான் இருக்கும். அத்தகைய போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகள் நிறைய சலுகைகளை வழங்குகிறது. இப்பொது வாடிக்கையாளருக்கு பயனுள்ளதாக புதுப்புது சேமிப்பு திட்டங்களை அறிமுக படுத்துகிறது. அதனை பற்றி தெளிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.  சேமிப்புகள் நமக்கு மாத வருமானத்தை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி ஒரு சேமிப்பு திட்டம் தான் POMIS சேமிப்பு திட்டம். வாருங்கள் POMIS திட்டத்தினை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

3 மாதத்திற்கு ஒருமுறை 8,200 ரூபாயை வட்டியாக அளிக்கின்ற இந்தியன் வங்கி SCSS திட்டம்

மாத வருமானம் வழங்க கூடிய திட்டம்:

post office mis scheme details in tamil

POMIS திட்டம்:

இந்த திட்டத்தின் பெயர் POMIS ஆகும். அதாவது Post Offfices Monthly Income Scheme ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மாத வருமானம் பெறலாம். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் சேர்ந்து பயன்பெறலாம்.

தகுதி:

இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் இணைய தகுதி உடையவர்கள்.

10 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் இந்த கணக்கில் இணையலாம்.

தபால் துறையில் மாதம் 2000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 7.1% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்

எவ்வளவு வட்டி கிடைக்கும்:

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

1 அக்டோபர் முதல் டிசம்பர் 30 வரை இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 % ஆகும்.

இந்த வட்டி விகித மாற்றங்களை அஞ்சல் துறையின் அதிகார பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த திட்டத்தில் தனி நபராகவோ அல்லது 3 நபர்கள் இணைந்து கூட்டாகவோ முதலீடு செய்யலாம்.

முதலீடு வரம்பு:

நீங்கள் குறைந்தது ரூபாய் 1,000 முதல் தனிநபராக இருக்கும் பட்சம் ரூபாய் 9 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.

அதுவே குழுவாக முதலீடு செய்தால் ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

எடுத்துக்காட்டாக:

நீங்கள் 4 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால்  7.4 % வட்டிவிகிதத்திற்கு உங்களுக்கு மாத வருமானமாக 5 வருடத்திற்கு 2,467 கிடைக்கும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement