5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

Advertisement

NSC Scheme in worthable profit 

பண கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? ஆனால் ஏதாவது ஒரு வகையில் நாம் சேமிப்பு செய்ய விரும்புவோம். நம்மிடம் பணம் இருக்கும் போது அதனை சரியான வழியில் சேமிப்பது சிறந்தது. அனைவருமே சேமிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அனைவருக்குமே கஷ்டமான காலம் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் நாம் சேமிக்கும் பணம் உதவும். அதனால் நீங்கள் சம்பாதிக்கும் போது அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நாம் அதிகமாக போஸ்ட் ஆபிஸில் தான் சேமித்து வருகின்றோம். அப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில் தபால் துறை புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம். ஒரு முறை முதலீடு செய்தல் போதும் 5 வருடத்தின் முடிவில் 1,44,000 வரை கிடைக்கும் அருமையான திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…

SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்

NSC Scheme in Post Office:

post office nsc scheme without tax in tamil 

தேசிய சேமிப்புச் சான்றிதழ் அல்லது NSC என்பது இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் இணைபவருக்கு அந்த தொகையின் மீது வரிவிலக்கு வழங்கப்படுகிறது.

வயது தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வட்டி கணக்கீடு செய்வதால் இந்த திட்டத்தின் மூலம் நல்ல வருமானம் செலுத்த முடியும். மேலும் இதில் முதிர்வு காலம் முடிந்த பிறகு அதற்கான வட்டியையும், அசலையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான வட்டி எதிர்காலங்களில் உயர வாய்ப்பு உள்ளது.

5 வருடத்தில் வட்டியாக Rs. 2,24,517/- கிடைக்கும் தபால் துறை சேமிப்பு திட்டம். 

குறைந்தபட்ச வைப்புத்தொகை:

NSCயின் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூபாய் 1000 ஆகும். இந்தத் தொகையை தனிநபரின் விருப்பப்படி டெபாசிட் செய்யலாம்..

அதிகபட்ச வைப்புத்தொகை:

NSCயில் அதிகபட்ச வைப்புத் தொகைக்கு வரம்பு இல்லை. இருப்பினும், தனிநபர்கள் வரி விலக்கு பெற பொருத்து அதிகபட்ச வைப்பு தொகை வரம்பு மாறலாம்.

முதலீட்டு காலம்:

NSCயின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள்.

கடன் வசதி:

NSCயில் நீங்கள் செலுத்தியுள்ள தொகையின் மீது கடன் வசதி பெறலாம்.

திரும்பி பெறும் வசதி:

தகுந்த காரணங்கள் இன்றி 5 வருடங்களுக்கு முன்னர் முதலீட்டை திரும்ப பெற முடியாது.

இந்த திட்டம் அதிகபட்சமாக முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதை தெளிவாக பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  வட்டி  மொத்தம் 
5 வருடம் 1,00,000 Rs.44,903/- Rs.1,44,903/-
5 வருடம் 3,00,000 Rs.1,34,710/- Rs.4,34,710/-
5 வருடம் 5,00,000 Rs.2,24,517/- Rs.7,24,517/-
5 வருடம் 10,00,000 Rs.4,49,033/- Rs.14,49,033/-

 

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement