NSC Interest Rate Calculator Post Office
போஸ்ட் ஆபீசில் என்பது நமக்கான கடிதங்களை கொண்டு வந்து கொடுப்பதற்காக மற்றும் கடிதங்களை மற்ற இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு உள்ளது என்று தான் நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இத்தகைய நன்மை இதில் இருந்தாலும் கூட இதனை தாண்டி எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் இதில் அடங்கி உள்ளது. தபால் துறையில் காணப்படும் சேமிப்பு திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதம் என இவை அனைத்தும் வேறுபட்டு காணப்படுகிறது. அதன் படி பார்த்தால் இதில் உள்ள திட்டங்கள் பலருக்கு தெரிந்தாலும் கூட அதில் எவ்வளவு சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்ற விவரங்கள் சரியாக தெரிவது இல்லை. ஆகவே இன்று ஒரு எடுத்துக்காட்டாக போஸ்ட் ஆபீசில் உள்ள NSC சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு சேமித்தால் முதிர்வு காலம் முடிந்த பிறகு எவ்வளவு தொகையினை அசலாக பெறலாம் என்பதை எடுத்துக்காட்டாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
வயது தளர்வு:
போஸ்ட் ஆபிசில் உள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் சேமித்து பயன்பெறலாம்.
சேமிப்பு தொகை:
குறைந்தபட்ச சேமிப்பு தொகை | அதிகப்பட்ச சேமிப்பு தொகை |
ஆரம்ப தொகை 1000 ரூபாய் | வரம்பில் இல்லை. |
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் சேமிப்பு தொகைக்கான வட்டி விகிதமாக 7.70% ஆக அளிக்கப்படுகிறது.
சேமிப்பு காலம்:
போஸ்ட் ஆபிஸில் உள்ள இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. இந்த 5 வருடத்தில் நீங்கள் ஏதேனும் சேமிப்பு தொகையில் இருந்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்புகளும் இதில் உள்ளது.
8 லட்சம் கார் லோன் வாங்கினால் மாதம் EMI மற்றும் மொத்த வட்டி இந்தியன் வங்கியில் எவ்வளவு தெரியுமா
5 வருடத்தில் மொத்த அசல் எவ்வளவு கிடைக்கும்:
மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி நீங்கள் 3 விதமான குறிப்பிட்ட தொகைகளை இதில் சேமிப்பதன் மூலம் 5 வருடம் கழித்து அசல் மற்றும் வட்டியாக எவ்வளவு பெறலாம் என்று கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
சேமிப்பு தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | அசல் தொகை |
25,000 ரூபாய் | 5 ஆண்டு | 11,226 ரூபாய் | 36,226 ரூபாய் |
1,50,000 ரூபாய் | 5 ஆண்டு | 67,355 ரூபாய் | 2,17,355 ரூபாய் |
5,00,000 ரூபாய் | 5 ஆண்டு | 2,24,516 ரூபாய் | 7,24,516 ரூபாய் |
5 ஆண்டில் 6,98,749 ரூபாயினை அளிக்கும் இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |