மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாதம் மாதம் இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டம், தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
senior citizen saving scheme in IOB:
55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு குறைவான நபர் இந்த திட்டத்தில் இணையலாம்.
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதம். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டத்தின் வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் வட்டி உங்களின் கணக்கில் வரவுவைக்க படும்.
தபால் துறையில் 5000 ரூபாய் சேமித்தால் 16,27,284/- வரை கிடைக்கக்கூடிய அசத்தலான திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் கணக்கு:
இந்த கணக்கை 55 வயதுக்கு மேல் 60 வயதிற்குள்ளான எந்த ஒரு இந்திய குடிமகனும் தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ரூபாய் 1000 முதல் செலுத்தலாம். அதிகபட்சமாக 30 லட்சம் வரை நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
SCSS கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்:
- வயது ஆதாரம்
- கடவுச்சீட்டு
- மூத்த குடிமக்கள் அட்டை
- பான் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ரேஷன் கார்டு
- ஓட்டுனர் உரிமம்
வட்டி விகிதம்:
தற்போது, இந்தச் சேமிப்புக் கணக்கிற்குச் சுமார் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.
1,00,000 முதலீட்டிற்கு 1,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் அஞ்சலக திட்டம்
முதிர்வு தொகை அல்லது கணக்கை மூடும் முறைகள்:
ஒரு ஆண்டிற்கு முன்னர் வைப்புத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டுமெனில், மொத்த வைப்புத் தொகையின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதம் அபராதமாகச் செலுத்த வேண்டும். அதுவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பு நிதியைத் திரும்ப எடுக்க நினைத்தால் 1 சதவீத அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை.
முதிர்வு காலம்:
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடிவுற்ற பிறகு தங்கள் கணக்கை நீட்டிக்க விரும்பினால் மேலும் 3 வருடங்களுக்கு கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக
நீங்கள் இந்த திட்டத்தில் 30 லட்சம் முதலீடு செய்தால் 8.2% வட்டிவிகிதத்தில், 5 வருடத்திற்கு வட்டி 12,30,000 வரை கிடைக்கும். மொத்தமாக 5 ஆண்டின் முடிவில் நீங்கள் உங்கள் கணக்கை முடித்துக்கொள்ள நினைத்தால் ரூபாய் 42,30,000 வரை நீங்கள் பெறுவீர்கள்.
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |