How to Get 1 Crore in PPF in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் PPF திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் 1 கோடி கிடைக்கும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. PPF (Public Provident Fund) என்பது ஒரு சிறந்த முதலீட்டு சேமிப்பு திட்டமாகும். இது அதிக வட்டி மற்றும் பாதுகாப்பான அம்சங்களை வழங்குகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக வட்டி பெற முடியும்.
1968 ஆம் ஆண்டில் PPF திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சம் வைப்புத்தொகைக்கு ஈட்டப்படும் வட்டி வரி விதிக்கப்படாது. மேலும், முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டியும் அளிக்கப்படுகிறது. ஆகையால், இத்திட்டத்தினை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் 1 கோடி வரை பணம் பெறுவது எப்படி.? என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
How Much to Invest in PPF to Get 1 Crore in Tamil:
வட்டி விகிதம்:
PPF (பொது வருங்கால வைப்பு நிதி) திட்டத்தில் ஆண்டு வட்டி விதமாக 7.1% அளிக்கப்படுகிறது.
PPF முதலீடு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
டெபாசிட் தொகை:
- இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் (ஆண்டுக்கு) வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
- இத்திட்டத்தின் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு 15 ஆண்டுகள் LOCK IN காலம் உள்ளது. அதாவது, நீங்கள் சேமிக்கும் தொகையினை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது.
வரிச்சலுகை:
- இத்திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 80-சி பிரிவின் கீழ், வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
- அதுமட்டுமில்லாமல், பிபிஎஃப் திட்டத்தில் பெறப்பட்ட வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
நீட்டிப்பு காலம்:
- 15 வருடம் முடிந்த பிறகு, 5 ஆண்டுகள் தொகுதிகளாக நீட்டிக்க முடியும்.
1 கோடி சேமிப்பது எப்படி.?
இத்திட்டத்தில், நீங்கள் 15 வருடத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்து செய்தீர்கள் என்றால் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். அதுவே, நீங்கள் 15 வருடம் முடிந்த பிறகு, 5 ஆண்டுகள் என இரண்டு முறை நீடித்து அதே தொகையினை டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.03 கோடி கிடைக்கும்.ஆண்டுகள் | மாதம் டெபாசிட் செய்யும் தொகை | மொத்த டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை |
25 ஆண்டுகள் | ரூ.12,500 | ரூ.37.50 லட்சம் | ரூ.65.58 லட்சம் | ரூ.103 கோடி |
மொத்த டெபாசிட் தொகை + மொத்த வட்டி தொகை = (ரூ.37.50 லட்சம் + ரூ.65.58 லட்சம்) =ரூ.103.08 கோடி
PPF vs SIP இரண்டில் எந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் தெரியுமா..?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |