Which is Best PPF or SIP in Tamil
நம்மில் பலருக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இத்தகைய ஆசை வந்த உடனே அதன் பின்னே எதில் முதலீடு செய்வது என்ற ஒரு குழப்பமும் வந்து விடும். இந்த குழப்பத்திற்கான தீர்வினை காண வேண்டும் என்று நமக்கு முன்பு முதலீடு செய்த நபர்களிடம் இதை பற்றி தெரிந்துக்கொள்வோம். ஆனால் எதிர்பார்த்த மாதிரியான பதில்கள் அனைத்தும் அவர்களிடம் கிடைக்காது. இனி நீங்கள் இது மாதிரி குழப்பம் அடைய வேண்டாம். ஏனென்றால் இன்றைய முதலீடு பதிவில் 2 முக்கியமான முதலீடு திட்டங்களை பற்றி தான் பார்க்கபோகிறோம். ஆகவே பதிவை முழுவதுமாக படித்து PPF or SIP இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
SIP என்றால் என்ன..?
SIP-ன் முழு விரிவாக்கம் Systematic Investment Plan என்பதாகும். உங்களிடம் இருக்கும் பணத்தினை மொத்தமாக முதலீடு செய்யலாம் தவணை முறையில் முதலீடு செய்யும் முறையே SIP எனப்படும்.
மேலும் இந்த SIP ஆனது மியூச்சுவல் பண்ட் வழியாக முதலீடு செய்யப்படும் மற்றொரு முறையாகும் கருதப்படுகிறது. இதில் 500 ரூபாயினை கூட நீங்கள் மாதாந்திர முறையில் முதலீடு செய்யலாம்.
- இதில் உங்களுக்கான தொகையினை மாதந்தோறும் தவணை முறையில் பெற்று கொள்ளலாம். அதேபோல் முதலீடு செய்யும் பணத்தினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
- எஸ்ஐபி-யில் முதலீட்டிற்கான கால வரம்பு என்று நிலையான எதுவும் கிடையாது.
- 12% முதல் 18% வரை என தோராயமாக இதற்கு இடையே தான் வட்டி விகிதம் ஆனது வழங்கப்படுகிறது.
- மேலும் இதில் பெரும்பாலும் வரி விலக்கு எதுவும் கிடையாது.
- இத்தகைய முதலீடானது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால் சில ஏற்றம், இறக்கம் காணப்படலாம்.
- மேலும் இதில் லாக் இன் காலம் ஆனது 3 வருடமாக உள்ளது. மற்ற அனைத்தும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது.
PPF vs ELSS இரண்டு திட்டத்தில் எதில் முதலீடு செய்வது |
PPF என்றால் என்ன..?
Public Provident Fund என்பதே PPF என்பதன் முழு விரிவாக்கம் ஆகும். இந்த திட்டம் ஒரு நீண்ட கால வைப்பு நிதி திட்டம் என்பதால் உங்களால் முடிந்த பணத்தினை இதில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.
அதேபோல் இந்த திட்டத்தினை சிக்கல்கள் இல்லாத ஒரு பாதுக்கப்பான திட்டம் என்றும் கூறலாம்.
- இதில் குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாய் முதல் அதிகப்பட்ச முதலீடாக 1.5 லட்சம் வரை இதில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.
- பிபிஎப் முதலீடு திட்டத்திற்கான காலம் 15 வருடமாகும். ஒருவேளை இதில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் 5 வருடம் வரை நீடித்து கொள்ளலாம்.
- இதற்கான வட்டி விகிதமாக தோராயமாக 7.1% வரை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வட்டி விகிதம் 3 மாதத்திற்கு ஒருமுறை அரசால் மாற்றி அமைக்கப்படுகிறது.
- மேலும் இதில் பிரிவு 80C இன் கீழ் வரி கிடையாது.
- பிபிஎப் முதலீடு அரசாங்கத்தின் திட்டம் என்பதால் ஆபத்துகள் மிகவும் குறைவு. மேலும் இதில் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.
- அதேப்போல் இது லாக்-இன் காலத்தை கொண்டுள்ளதால் நீங்கள் முதலீடு செய்துள்ள பணத்தினை 15 வருடத்திற்கு இடையில் பெற முடியாது.
PPF or SIP இரண்டில் எது சிறந்தது..?
பொதுவாக நீங்கள் ஒரு பாதுகாப்பான நீண்ட கால முதலீட்டை பெற வேண்டும் என்றால் அதற்கு PPF திட்டம் சிறந்ததாகும்.
ஒருவேளை நீங்கள் ஆபத்துகள் இருந்தாலும் அதிக வட்டியுடன் கூடிய தொகையினை பெற வேண்டும் என்றால் அதற்கு SIP முதலீடு சிறந்தது. அதனால் இதில் எது வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |