Mutual Fund or PPF Which is Better
பொதுவாக நாம் புதிதாக எந்த ஒரு ஆடை அல்லது நகைகள் வாங்கினாலும் அதனை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்த்து சிறந்ததாக எது இருக்கிறதோ அதனை தான் வாங்குவோம். அதுமட்டும் இல்லாமல் கடையில் ஒரு உணவு சாப்பிட்டால் கூட எது உடலுக்கு நல்லது என்று யோசித்து அதன் பிறகு தான் சாப்பிடுவோம். இவ்வாறு நாம் உணவு முதல் உடை என அனைத்தினையும் ஒப்பிட்டு பார்த்து வாங்கும் பட்சத்தில் பணத்தை முதலீடு செய்வதலிலும் ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது தான் சிறந்தது. அந்த வகையில் இன்று மியூச்சுவல் பண்ட் மற்றும் பிபிஎப் இரண்டில் எது சிறந்தது என்றும், எதில் முதலீடு செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
Which is Best PPF or Mutual Fund:
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?
உங்களிடம் இருக்கும் பணத்தினை மொத்தமாக ஏதோ ஒரு பங்குசந்தையில் முதலீடு செய்து நீண்ட கால தொகையினை பெரும் ஒரு முறை ஆகும். இதுவே மியூச்சுவல் பண்ட் ஆகும். மேலும் மியூச்சுவல் பண்டில் பணத்தை நேரடியாக முதலீடு செய்யாமல் முதலீட்டாளரிடம் இருந்து பெரும் முறையாக உள்ளது.
முதலீடு:
ஒரு நபர் 1 வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என 15 வருடத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட்டில் 15 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் தோராயமாக வருடத்திற்கு 15% வட்டி விகிதத்தினை பெற முடியும்.
அப்படி என்றால் 15 வருடத்திற்கு கழித்த பிறகு தோராயமாக 42,00,000 ரூபாயினை பெறலாம். மேலும் உங்களுக்கான வரிச்சலுகை என்பது முதலீட்டிற்கு ஏற்றவாறு அமையும்.
பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா |
பிபிஎப் என்றால் என்ன..?
பிபிஎப் என்பது ஒரு வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டமானது ஒரு நீண்ட கால முதலீடு திட்டம் ஆகும். மேலும் இதில் உங்களுக்கான பணத்தினை நேரடியாக முதலீடு செய்து கொள்ளலாம். அதேபோல் இது அரசு திட்டம் மற்றும் சிக்கல்கள் இல்லாத திட்டம் என்று கூறலாம்.
முதலீடு:
அதுவே வருடத்திற்கு 1,00,000 ரூபாய் என்ற கணக்கில் 15 வருடத்திற்கு இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15,00,000 ரூபாயினை முதலீடு செய்தால் வட்டி விகிதமாக தோராயமாக 7.1% அளிக்கப்படும்.
இதன் படி பார்க்கும் போது 15 வருடத்திற்கான வட்டி தொகையாக 12,12,139 ரூபாயினை பெறலாம். அதுவே 15 வருடம் அழித்து அசல் தொகையாக 27,12,139 ரூபாயினை தோராயமாக பெறலாம்.
மேலும் இதிலும் உங்களுக்கு வரிச்சலுகை என்பது உண்டு.
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிபிஎப் இரண்டில் எது சிறந்தது:
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிபிஎப் இரண்டும் பாதுகாப்பான மற்றும் நீண்ட கால முதலீடாக இருந்தாலும் கூட பிபிஎப் உடன் மியூச்சுவல் ஃபண்ட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது லாபம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஆகவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
எதில் முதலீடு செய்கிறீர்களோ இல்லையோ இதில் கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |