PPF vs ELSS இரண்டு திட்டத்தில் எதில் முதலீடு செய்வது.?

Advertisement

PPF vs ELSS Which is Better in Tamil

இன்றைய காலத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் எதில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைவாக இருக்கும், எதில் லாபம் அதிகமாக இருக்கும் என்று பல கேள்விகள் இருக்கும். சம்பாதிப்பதை விட சம்பாதிக்கும் பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்வது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் PPF VS ELSS இரண்டு திட்டத்தில் எதில் முதலீடு செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

PPF:

PPF scheme in tamil

PPF அல்லது பொது வருங்கால வைப்புநிதி என்பது இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமாகும்.  தனிநபர்கள் பயன்பெற இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கில் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இந்திய அரசால் வட்டி தொகை நம் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் 7.10% வட்டி வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகள் கால  கொடுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு  பிறகு குறிப்பிட்ட தொகையை திரும்ப பெறலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இதில் முதலீடு செய்வதால் ஆபத்து இல்லை.

Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா 

ELSS:

elss scheme in tamil

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருமான வரி சலுகை உள்ள திட்டங்களில் ELSS-ம் ஒன்று. இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை கிடைக்கும். இந்த ஃபண்டுகள் ஈக்விட்டியுடன் அதிக தொடர்புடையதால் அதிக லாபம் கிடைக்கும் ஃபண்டுகளாக உள்ளன.

இதில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

இதனுடைய லாக் இன் காலம் 3 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது.

எதில் முதலீடு செய்வது:

இரண்டு திட்டங்களில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருப்பீர்கள். ஒருவர் நீண்ட கால முதலீடாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் PPF  சிறந்தது. அதுவே ரிஸ்க் அதிகமாக விருந்தாகும் பரவாயில்லை லாபம் அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ELSS சிறந்ததாக இருக்கும்.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement