சேமிக்கும் தொகையை இரட்டிப்பாக்கி தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்..! ஆன்லைன் மூலம் ஓபன் செய்வது எப்படி.?

Advertisement

கிசான் விகாஸ் பத்ரா (KVP)

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சேமிப்பு தொகையை இரட்டைப்பாக்கும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) அஞ்சலக சேமிப்பது திட்டத்தை ஆன்லைனில் தொடங்குவது எப்படி.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க. தபால் துறை கிசான் விகாஸ் பத்ரா (KVP) சேமிப்பு திட்டமானது பாதுகாப்பான மற்றும் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதற்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கால அளவு 115 மாதம் ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையினை 115 மாதத்திற்கு பிறகு இரு மடங்காக பெறலாம். மேலும், இத்திட்டத்தினை பற்றிய விவரங்களையும், ஆன்லைன் கணக்கு தொடங்குவது எப்படி.? என்பதையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கிசான் விகாஸ் பத்ரா (KVP) அஞ்சலக சேமிப்பு திட்டம்:

மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.  கிசான் விகாஸ் பத்ரா (KVP) அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேருவதன் மூலம், சேமிப்பு தொகையினை இரட்டிப்பாக பெறலாம்.

தகுதிகள்:

  • KVP சேமிப்பு திட்டத்தில் சேருபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • 18 வயதிற்குள் உள்ளவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, அவர்களின் பாதுகாவலர் இத்திட்டத்தில் சேரலாம்.
  • HUF மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இத்திட்டத்தில் சேர முடியாது.

போஸ்ட் ஆபீஸ் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள்

டெபாசிட் தொகை:

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

கிசான் விகாஸ் பத்ரா (KVP) அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் 7.5% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

உதாரணமாக:

நீங்கள் இத்திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 115 மாதங்களுக்கு பிறகு, உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

ஆன்லைனில் தொடங்குவது எப்படி.?

 how to open kvp in post office online in tamil

  • முதலில், DOP Internet Banking -ற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்து அப்பக்கத்தில் உள்ள ‘General Services’ >’Service Requests’ > ‘New Requests என்பதை கிளிக் செய்து உள் நுழையவும்.
  • அப்பக்கத்தில் உள்ள NSC என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • டெபிட் கணக்கு இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கைத் தேர்வு செய்யுங்கள்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும்.
  • அடுத்து, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement