Indian Bank 300 Days FD Interest Rate in Tamil
இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களையும், லோன்களையும் வழங்கி வருகிறார்கள். இவற்றில் சேமிப்பு திட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், FD, RD போன்ற சேமிப்பு திட்டங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளது. எனவே, அந்த வகையில் இந்தியன் வணிகளில் வழங்கக்கூடிய FD சேமிப்பு திட்டங்கள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
இந்தியன் பேங்க் பல்வேறு வகையான கால அளவில் பொதுமக்களுக்கு FD (Fixed Deposit) சேமிப்பு திட்டத்தை வழங்குகிறார்கள். அவற்றில் ஒன்று தான் IND SUPREME 300 DAYS FD சேமிப்பு திட்டம் தான். இத்திட்டத்தினை பற்றிய முழு விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க
Indian Supreme 300 Days Scheme:
இத்திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகை டெபாசிட் செய்கிறீகளோ அந்த தொகையினை வட்டியுடன் சேர்த்து 300 நாட்களுக்கு பிறகு பெறலாம். இத்திட்டத்தின் கால அளவு 300 நாட்கள் என்பதால் நீங்கள் மிக குறுகிய காலத்தில் அதிகமாக தொகையினை சேமிக்க முடியும்.
கால அளவு:
இத்திட்டத்தின் கால அளவு 300 நாட்கள் ஆகும். ஆகையால் நீங்கள் மிக குறுகிய காலத்தில் அதிகமாக தொகையினை சேமிக்க விரும்பினால் இத்திட்டத்தினை தேர்வு செய்து பயனடையலாம்.
டெபாசிட் தொகை:
IND SUPREME 300 DAYS FD சேமிப்பு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
IND SUPREME 300 DAYS FD திட்டத்தில் General citizen, Senior citizen மற்றும் Super Senior Citizen என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அவற்றின் வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
General citizen | Senior citizen | Super Senior Citizen | |
வட்டி விகிதம் | 7.05% | 7.55% | 7.80% |
இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்.?
General Citizen:
டெபாசிட் தொகை | வட்டி தொகை | கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் ரூபாய் | 5,930 ரூபாய் | 1,05,930 ரூபாய் |
5 லட்சம் ரூபாய் | 29,654 ரூபாய் | 5,29,654 ரூபாய் |
Senior Citizen:
டெபாசிட் தொகை | வட்டி தொகை | கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் ரூபாய் | 6,360 ரூபாய் | 1,06,360 ரூபாய் |
5 லட்சம் ரூபாய் | 31,803 ரூபாய் | 5,31,803 ரூபாய் |
Super Senior Citizen:
டெபாசிட் தொகை | வட்டி தொகை | கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் ரூபாய் | 6,576 ரூபாய் | 1,06,576 ரூபாய் |
5 லட்சம் ரூபாய் | 32,881 ரூபாய் | 5,32,881 ரூபாய் |
பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |