பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..

Advertisement

பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை

கன்யா சுமங்கலா யோஜனா:  பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. இந்த திட்டங்களில்  கன்யா சுமங்கல யோஜனாவும் ஒன்றாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் 6 தவணைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைய வேண்டுமென்றால் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். இந்த பதிவில் இந்த திட்டத்தினை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம் வாங்க..

கன்யா சுமங்கலா யோஜனா 2024:

முக்யமந்திரி கன்யா சுமங்கலா யோஜனா திட்டமானது உத்தரபிரதேச அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களுக்கு 6 தவணைகளில் ₹15000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பையும் வழங்குகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஆண்டு வருமானம் அதிகபட்சம் ₹ 300000 அல்லது அதற்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். இத்திட்டத்தின் பட்ஜெட் 1200 கோடி ரூபாயாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முக்யமந்திரி கன்யா சுமங்கலா யோஜனா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் இயக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் மேற்படிப்பிற்கு உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தில் 15,000 ரூபாய் வழங்கி வந்த நிலையில் 2024-25-ம் நிதியாண்டில் 25,000 ரூபாயாக உயாத்தியுள்ளது.

இந்த திட்டமானது தமிழ்நாட்டில் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள், இந்த திட்டமானது உத்திரபிரசதேசத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பெண்களுக்காக 50,000 கடன் வழங்கும் அன்னபூர்ணா திட்டம்!

தகுதி:

இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு ,மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயனடைவதற்கு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

2 பெண் குழந்தைகள் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் அடையமுடியும்.

எவ்வளவு கிடைக்கும்:

பெண் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் கணக்கில் ரூ.5,000 மாற்றப்படும். மகளுக்கு ஒரு வயது ஆகும் போது, 2000 ரூபாயும், அதே போல், மகள் முதல் வகுப்புக்கு சென்றவுடன், 3,000 ரூபாயும் வழங்கப்படும்.

அடுத்து குழந்தை ஆறாம் வகுப்பில் சேரும்போது ரூ.3,000 கணக்கில் வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் போது ரூ.5,000 மற்றும் மகள் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளை முடிவு செய்தால், ரூ.7,000 கணக்கில் வழங்கப்டுகிறது.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரர் உத்திரபிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆதார் அட்டை
அடையாள அட்டை
நான் சான்றிதழ்
பெண் பிறப்பு சான்றிதழ்
முகவரி ஆதாரம்
கைபேசி எண்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement