PPF Investment Plan
நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தில் உள்ள ஒரு பகுதியினை எதிர்காலத்திற்காக சேமித்து வருகிறோம். அப்படி நாம் சேமித்து வைக்கும் பணமானது பிற்காலத்தில் நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன் அளிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு நம்முடைய எதிர்காலத்திற்காக பயன்படும் பணத்தினை ஒரு நிதிநிறுவனத்தில் சேமித்து வைத்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதலீடு செய்த தொகையுடன் சேர்த்து வட்டி தொகையும் கிடைக்கும். ஆகையால் நாம் எந்த ஒரு நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தாலும் அதில் உள்ள அனைத்து தகவலையும் நன்றாக தெரிந்துக்கொண்டு தான் அதன் பின்னரே முதலீடு செய்ய வேண்டும். அதனால் இன்று பலரும் முதலீடு செய்து இருக்கும் PPF திட்டத்தினை பற்றிய தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்.. |
PPF Investment Details:
இந்த PPF திட்டத்தின் முதிர்வு காலம் என்பது 15 வருடம் ஆகும். அதுபோல இத்தகைய திட்டமானது வரி இல்லாத ஒரு திட்டம் என்றும் கூறலாம்.
இதில் நீங்கள் 15 ஆண்டுகள் வரை உங்களுடைய கணக்கு முடிந்து விட்டது என்றால் அதனை பின்பும் நீங்கள் கணக்கை தொடரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுமாதிரி கணக்கை மீண்டும் தொடங்குவது பற்றிய முழுவிவரங்கள் நிறைய நபர்களுக்கு தெரியாமல் உள்ளது. ஆகையால் அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொகை:
இத்தகைய திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 500 ரூபாய் முதல் அதிகபட்ச தொகை 1.5 லட்சம் ஆகும்.
ஆரம்பகாலத்தில் நீங்கள் இந்த திட்டத்தின் போது செலுத்திய தொகையினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் முறையாக படிவத்தினை பூர்த்தி செய்து கையெழுத்து போட்டால் மட்டும் போதும்.
வட்டி விகிதம்:
15 வருடத்திற்கான முதலீட்டு தொகைக்கான வட்டி விகிதம் தோராயமாக 7.1% ஆகும். அதுவே நீங்கள் மீண்டும் 5 வருடத்திற்கு கணக்கை தொடங்கினால் அதற்கான வட்டி விகிதம் அதே 7.1% ஆக வழங்கப்படுகிறது.
மேலும் வட்டி விகிதம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை மாற்றங்களுடன் காணப்படும்.
திரும்ப பெரும் தொகை:
உதாரணமாக நீங்கள் 1,50,000 ரூபாய்க்கான முதலீட்டை நீங்கள் 15 வருட கால அளவில் தேர்வு செய்து இருந்தால் உங்களுக்கு தோராயமாக 40 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
அதுவே மேலும் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் கணக்கை தொடர்ந்தால் இன்னும் அதிகபட்சமான தொகையினை பெறலாம்.
லோன் பெறும் வசதி:
இத்தகைய முதலீட்டு திட்டத்திற்கு கீழ் நீங்கள் லோன் எதுவும் பெற வேண்டும் என்றால் அதனை நீங்கள் முதல் 15 வருடத்திற்குள் தான் பெற முடியும். அதுவும் குறிப்பாக 3 வருடத்திற்கு மேல் 6 வருடத்திற்குள் தான் பெற முடியும்.
உங்களுடைய முதலீடு காலம் முடிவடைவதற்குள் இதனை செலுத்தி விட வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |