SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்..!

Advertisement

SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்..! Best Investment Plan in India in Tamil..!

மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து 6 கோடி ரூபாயை நீங்கள் லாபமாக பெறலாம் என்று சொன்னால் உங்களால் நம்ம முடியுமா? கண்டிப்பாக முடியும். எப்படி முடியும் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் நாம் முதலீடு செய்தால் நாமும் கோடீஸ்வரர் ஆகலாம். தற்பொழுது பலருக்கும் தெரிந்திருக்கும் ஒரு விஷயம் தான் மியூச்சுவல் ஃபண்ட்.. ஒருவேளை உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரியாது என்றால். ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.. மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்.

சரி வாங்க மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து 6 கோடி ரூபாயை எப்படி பெறுவது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

SIP-யில் 2000 போட்டா 2 லட்சம் வர கிடைக்குமா! அப்போ 5000 போட்டா?

மியூச்சுவல் ஃபண்ட் டைப்ஸ்:

இந்த மியூச்சுவல் ஃபண்டில் நான்கு வகை உள்ள அவை..

  1. Equity Mutual Fund
  2. Debt Mutual Fund
  3. Tax Saving Mutual Fund
  4. Balanced Mutual Fund

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது.?

Equity Mutual Fund:

இந்த Equity Mutual Fund என்பது அதிக ரிஸ்க் மற்றும் அதிக லாபம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். ஆக நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க தயார் என்றால் இந்த Equity Mutual Fund-ஐ தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

Debt Mutual Fund:

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது Debt Mutual Fund ஆகும். இவற்றில் ரிக்ஸ் என்பது அதிகமாக இருக்காது, ரிஸ்க் குறைவு என்பதால் இவற்றில் லாபமும் குறைவாக தான் கிடைக்கும். ஆக நீங்கள் ரிஸ்க் இல்லாத ஒரு இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்த Debt Mutual Fund-ஐ தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

Tax Saving Mutual Fund:

இந்த Tax Saving Mutual Fund-ஐ நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்தால் உங்களுக்கு இதன் மூலம் Tax Benefits கிடைக்கும்.

Balanced Mutual Fund:

இந்த Balanced Mutual Fund என்பது என்னவென்றால் Equity Mutual Fund + Debt Mutual Fund ஆகிய இரண்டிலும் 50, 50 சதவீதமாக முதலிடு செய்து Balances செய்வது தான் Balanced Mutual Fund ஆகும்.

ஆக மியூச்சுவல் ஃபண்டில் நாம் எந்த வகையை தேர்வு செய்கிறோமோ அதனை பொறுத்து Fund Manager அந்த வகை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்.

சரி நாம் Equity Mutual Fund-யில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இந்த Equity Mutual Fund-லும் மூன்று வகை உள்ளது அவை..

  • Large cap
  • Mid Cap
  • Small cap

Fund Manager பெருபாலான தொகையை Large Cap Company-யில் முதலீடு செய்வதை Large Cap Equity Fund என்று சொல்வார்கள்.

இந்த Large Cap Company என்பது என்ன என்று முதலில் செய்துகொள்வோம்.. அதாவது இந்த Company-யின் Market Capitalization 2000 கோடி மேல் இருந்தால் அதனை Large Cap Company என்பார்கள். இது National Stock Exchange மற்றும் Bombay Stock Exchange-யில் இருக்க கூடிய டாப் 100 நிறுவனம் ஆகும்.

Equity Mutual Fund-யில் Large Cap-யில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் – Best Investment Plan in India in Tamil:

இவற்றில் முதலீடு செய்வதற்கும் இரண்டு வகைகள் உள்ளது, ஓன்று SIP மற்றொன்று Lum Sum.

Lum Sum என்பது நாம் மொத்தமாக ஒரு தொகையை ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் பெறுவது தான் Lum Sum ஆகும்.

SIP- என்பது உதாரணத்திற்கு உங்கள் 25 வயதில் இருந்து SIP-யில் மாதம் மாதம் 5000 ரூபாயை 40 வருடங்களுக்கு முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 40 வருடத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபம் என்று பார்த்தால் 6 கோடி ரூபாயாக இருக்கும். SIP-யில் நீங்கள் குறைந்த காலத்தில் முதலீடு செய்தால் லாபம் அவ்வளவு பெரிய அளவில் கிடைக்காது. ஆனால் அதிக காலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement