மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள் | Mutual Funds Details in Tamil

Advertisement

 Mutual Funds என்றால் என்ன ?

Mutual Funds Details in Tamil:- வணக்கம் நண்பர்களே.. பொதுவாக பங்குசந்தைகளில் முதலீடு செய்து அதன் மூலம் நிறைய லாபம் பெறுபவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் பங்குச்சந்தையை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அவற்றில் முதலீடு செய்து எப்படி லாபம் பெறுவது என்று தெரிவதில்லை. இதன் காரணமாகவே பலர் பங்குசந்தையில் முதலீடு செய்ய அதிகம்  தயங்குகின்றனர். ஷேர் மார்க்கெட்டிங் பற்றி ஒன்றும் தெரியாத நபரா நீங்கள். இருப்பினும் ஏதாவது ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து அவற்றில் லாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.. அப்படி என்றால் உங்களுக்காக உருவானதுதான் மியூச்சுவல் ஃபண்ட். சரி இந்த பதில் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?, மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதிலுள்ள நன்மைகள் என்ன? போன்ற விவரங்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

மியூட்ச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் தங்களது முதலீட்டை கொடுத்து நீங்கள் பங்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை எங்களுக்கு பிரித்துக்கொடுங்கள் என்று சொல்வது. அந்த அமைப்பு, அப்படிப்பட்ட முதலீடுகள் குறித்து விவரம் தெரிந்த, அனுபவம் உள்ள ஒருவரை வேலைக்கு அமர்த்தி, பலரும் கொடுத்த பணத்தை முதலீடு செய்யச் சொல்வார்கள். அவர் முதலீடு செய்வார். ஆண்டு இறுதியில் லாப நட்டக் கணக்குப் பார்த்து, லாபத்தைப் பிரித்துக்கொடுப்பார். இதுதான் மியூட்ச்சுவல் ஃபண்ட்.

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீட்டாளர் அவசியம் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் Expense Ratio. இந்த Expense Ratio எவ்வளவு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொண்ட பிறகு தான் நீங்கள் அந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். Expense Ratio என்பது 0.1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வேறுபடும். ஆகவே நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் இந்த Expense Ratio-வின் அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கின்றது. அவ்வளவுக்கு அவ்வளவு லாபம் அதிகமாக கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் – Types of Mutual Funds in Tamil:

  1. Equity Funds
  2. Debt Fund
  3. Hybrid Mutual Funds
  4. Solution-Oriented Mutual Funds
  5. Index Funds மற்றும் பல

அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம்:

மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்:- பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அவ்வளவு பணம் தேவைப்படாது. வெறும் 500 ரூபாய் இருந்தால்கூட போதும். மாதம்தோறும் எஸ்.ஐ.பி (SIP) மூலமாக முதலீட்டை மேற்கொண்டு வருமானத்தை பெறலாம்.

  1. மியூச்சுவல் ஃபண்டில் உங்களுக்கு ரிஸ்கே வேண்டாம் குறைந்த வருமானமே போதும்’ என்று நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.
  2. அதேபோல என்னால் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்’ என்றாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்களும் இருக்கின்றன.
  3. அதிக வருமானம் வேண்டும், அதிக ரிஸ்க் எடுக்கத் தயார் என்றாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே உள்ளன.

எனவே, உங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி வருமான வரிவிலக்குப் பெறுவதற்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும்.

எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

  1. உங்களது உடனடி தேவைகளுக்கு அதாவது ஓர் ஆண்டுகாலத் தேவைக்கு ஷார்ட் டெர்ம் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட், இன்கம் ஃபண்டுகளில், அல்ட்ரா ஷார்ட் டெர்ம் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
  2. இடைக்காலத் தேவைக்கு அதாவது சுமார் ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான தேவைக்கு மீடியம் டேர்ம் ஃபண்ட்களான பேலன்ஸ்டு ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், இ.எல்.எஸ்.எஸ், ஷார்ட் அண்ட் மீடியம் டெர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
  3. நீண்டகாலத் தேவைக்கு அதாவது மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு செக்டார் ஃபண்ட்ஸ் மற்றும் ஈவிக்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்:- மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது இப்போது மிக எளிதாகிவிட்டது. முன்பெல்லாம் நேரடியாக அந்த அலுவகத்திற்கு சென்று சில வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை அதிக ஆவண வேலைகள் இல்லாமலே ஒருவர் எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் எளிதில் முதலீடு செய்ய முடியும். இதற்காக ஆன்லைனில் பலவகையான அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் தங்களுக்கு பிடித்த வசதிகளை பயன்படுத்தி நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யலாம்.

இருப்பினும் முதன் முறையாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ப்பவராக இருந்தால், KYC செயல்  முறையை நிறைவு செய்ய வேண்டும். அது ஒருமுறை மட்டுமே. KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது முதலீட்டு ஆலோசகரின் உதவியை நாடலாம் அல்லது நீங்களே ஆன்லைனில் e-KYC சரிபார்ப்பைச் செய்யலாம். KYC என்பது மியூச்சுவல் ஃபண்ட் உலகத்திற்குத் திறவுகோல் போன்றது. KYC சரிபார்ப்பை நிறைவுசெய்துவிட்டால், ஒவ்வொரு முதலீட்டுக்கும் சரிபார்ப்பு எதுவும் தேவையில்லை, நீங்கள் எந்த ஃபண்டை வேண்டுமானாலும் தேர்வுசெய்து முதலீடு செய்யலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement