மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (MIS)
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாதம் மாதம் இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டம், தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (MIS):
POMIS திட்டம்:
இந்த திட்டத்தின் பெயர் POMIS (Post Offfices Monthly Income Scheme) ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மாத வருமானம் பெறலாம்.
தகுதி:
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் சேர்ந்து இந்திய குடியுரிமை பெற்ற 10 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் அனைவரும் இணைய தகுதி உடையவர்கள்.
எவ்வளவு வட்டி கிடைக்கும்:
1 அக்டோபர் முதல் டிசம்பர் 30 வரை இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 % ஆகும்.
இந்த வட்டி விகித மாற்றங்களை அஞ்சல் துறையின் அதிகார பூர்வ தளத்தில் பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகள் ஆகும்.
இந்த திட்டத்தில் தனி நபராகவோ அல்லது 3 நபர்கள் இணைந்து கூட்டாகவோ முதலீடு செய்யலாம்.
முதலீடு வரம்பு:
நீங்கள் குறைந்தது ரூபாய் 1,000 முதல் தனிநபராக இருக்கும் பட்சம் ரூபாய் 9 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.
அதுவே குழுவாக முதலீடு செய்தால் ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
எடுத்துக்காட்டாக:
நீங்கள் 5 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால் 7 % வட்டிவிகிதத்திற்கு உங்களுக்கு மாத வருமானமாக 5 வருடத்திற்கு 2,916 கிடைக்கும்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |