பெண்களுக்கு அதிக வட்டி அளிக்கும் அரசின் அருமையான திட்டம்..! பெண்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!

Advertisement

அஞ்சல் துறையில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம் | Mahila Samman Savings Scheme in Tamil | Mahila Samman Savings Scheme Interest Rate

நம்மில் அனைவரும் காலத்திற்கு ஏற்ப சேமிப்பை தொடங்குகின்றோம். இன்றைய விலைவாசி உயர்வு காரணமாக பிற்காலத்திக்கு இப்போதே நம்மால் முடிந்த சிறு தொகையை சேமிக்கின்றோம். அப்படி சேமிக்கும் தொகை நமக்கு பாதுகாப்பானதாக இருக்கும். சேமிப்பு வங்கியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இப்படி சேமிக்கும் தொகை நமது குழந்தைகளுக்கும் பயன்னுள்ளதாக இருக்கும். பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று நிதி ஆகும். இதை நிவர்த்தி செய்ய, இந்திய அரசு சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இது பெண் குழந்தைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது பெண் குழந்தைக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பெண்களுக்கான இலக்கு முன்னோக்கி செல்கிறது. வாருங்கள் இன்றைய பதிவில் பெண்குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தில் இந்திய அஞ்சல் துறை வழங்கிவரும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

Mahila Samman Savings Scheme Details in Tamil:

  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் , 2023-24 ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வங்கியில் கிடைக்கும் FD வட்டி விகிதத்தை விட அதிகமாக வழங்கப்படுகிறது.
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் இந்திய அஞ்சலகங்களிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில வங்கிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.
  • இந்த அருமையான சமித்து திட்டம் 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது 2 வருட சேமிப்பு திட்டமாகும்.
  • இந்த இரண்டு ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
  • இத்திட்டத்தை நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையம்,  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்றவற்றில் தொடங்கலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு தொகை உங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்தெடுக்கும் தொகையினை ஒரே தவணையாக செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்% | Mahila Samman Savings Scheme Interest Rate:

இந்த மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் உங்களுக்கான வட்டி 7.50% விகிதம் வரை அளிக்கப்படும்.

சேமிப்பு காலம்:

2 வருடத்திற்கு 7.50 % வட்டி வழங்கப்படுகிறது. இதனால் குறைந்த காலத்தில் அதிக வட்டி பெரும் ஒரு திட்டமாக இந்த மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் இருக்கும்.

1,00,000 முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி எவ்வளவு..?

சேமிப்பு தொகை: 1,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 7.50%

வட்டி தொகை: 16,022 ரூபாய் 

மொத்த  அசல் தொகை:  1,16,022 ரூபாய் 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement