தமிழ் பழமொழிகளின் பட்டியல் | Proverbs in Tamil

Proverbs in Tamil

பழமொழிகள் தமிழ் | Tamil Palamoligal

பழமொழி என்பது நம் முன்னோர்கள் அவர்களின் அனுபவத்தின் மூலம் உணர்ந்த உண்மைகளை உலகிற்கு எடுத்து சொல்வதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது ஏதேனும் ஒரு சூழலில் குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்கு எளிதாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகின்ற பழமையான மொழியை பழமொழி என்கிறோம். பிறருக்கு வழிகாட்டுவதற்கு உதவியதால் இதனை பொன்மொழி என்றும் கூறுகிறோம். சரி வாங்க நாம் இந்த பதிவில் சமூகத்தில் நீண்ட நாட்களாக உபயோகத்தில் இருக்கும் பழமொழிகளை படித்து தெரிந்து கொள்வோம்.

10 பழமொழிகள் தமிழ் – Tamil Proverbs:

தமிழ் பழமொழிகள்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை அக்கம் பக்கம் பார்த்துப் பேசு
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண் சாதி பூமியைப் போல பொறுமை வேண்டும்
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகல் வட்டம் பகல் மழை
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு  அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும் இரக்கப் போனாலும் சிறக்கப் போ
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது  இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

Proverbs in Tamil:

20 பழமொழிகள்
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலி கொண்டு வெட்ட வேண்டும்
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
அகல உழுகிறதை விட ஆழ உழு இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
இருவர் நட்பு ஒருவர் பொறை இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான் இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை
நுணலும் தன் வாயால் கெடும் கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும் சிறு துரும்பும் பல் குத்த உதவும்
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது ஆரால் கேடு, வாயால் கேடு

Tamil Palamoligal:

பழமொழிகள் 50
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உள்ளூர் மாடு விலை போகாது  ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது தங்கம் தரையிலே தவிடு பானையிலே
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
உப்பில்லா பண்டம் குப்பையிலே. நாய் விற்ற காசு குரைக்குமா?
ஊர் வாயை மூட உலை மூடி இல்லை ஊரோடு ஒத்து வாழ்
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர் எலி அழுதால் பூனை விடுமா?

Palamoligal in Tamil:

Proverbs in Tamil
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான் அடியாத மாடு படியாது
அடிக்கும் பிடிக்கும் சரியாப் போச்சு அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அமிர்தம்
பேராசை பெரு நஷ்டம் ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது
அரசன் எவ்வழி குடி மக்கள் அவ்வழி அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்
அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல் பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

Pazhamozhi in Tamil:

Tamil Proverbs – 20 பழமொழிகள் Easy
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கிட்டாதாயின் வெட்டென மற தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் வரவு எட்டணா செலவு பத்தணா
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும் சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை பதறாத காரியம் சிதறாது
கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்

10 பழமொழிகள் தமிழ்:

Proverbs in Tamil
தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் பானை பிடித்தவள் பாக்கியசாலி
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? மனமிருந்தால் மார்க்கமுண்டு
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழமென்ன பக்கம் பார்த்துப் பேசு
வெளுத்ததெல்லாம் பாலல்ல நாய் வாலை நிமிர்த்த முடியாது
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமம்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது  விளையும் பயிர் முளையிலே தெரியும்
நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு  ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்

 

தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil