Psychology என்றால் என்ன தெரியுமா?

Advertisement

Psychology Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் Psychology என்றால் என்ன அவற்றின் அர்த்தம் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். சைக்காலஜி என்பது ஒருவரின் மனம் எப்படி இருக்கும் அவர்கள் எப்படி பட்டவர்கள், என்று ஒருவரின் மனநிலையை பற்றி அறிவதுதான் சைக்காலஜி ஆகும். இந்த சைக்காலஜி படிப்பை பலரும் படித்து கொண்டு இருக்கிறார்கள், பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களின் மனநிலையை பற்றி அறிவதற்காக இந்த சைக்காலஜி படிப்பை படித்து வருவார்கள், ஒரு சிலர் 12th  படிப்பு முடிந்ததும் சைக்காலஜி படிப்பை படித்து வருவார்கள். மேலும் இவற்றை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க. 

ஆன்மிகம் என்றால் என்ன? அதை பற்றிய சில தகவல்கள்

Psychology Meaning in Tamil:

  • உளவியல்
  • உள நூல்
  • மனத் தத்துவ சாஸ்திரம்
  • உளநூல் உள்ளத்தியல்
  • மனதின் ஆய்வு
  • தத்துவம் 
  • சுய அறிவு
  • பண்புகள்

Psychology என்றால் என்ன?

psychology என்பது  இரண்டு கிரேக்க வார்த்தைகளால் ஆனது அதாவது psychology= psycho + logos  இவை இரண்டும் சேர்ந்தது தான் psychology என்று அழைக்கபடுக்கிறது.

psycho என்றால் மனம் என்றும் logos என்றால்  படிப்பு என்றும் இவை இரண்டும் சேர்ந்தால் மனதை பற்றிய படிப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் The Study Of Cognitive Process And Human Behaviour  என்று சொல்லப்படுகிறது.

சைக்காலஜி என்பது உளவியல் அல்லது மனோதத்துவம் மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறை  என்றும் சொல்லப்படுகிறது.

மனிதர்களின் மனதை பற்றி தெரிந்து கொள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் மனதை பற்றி கணிக்க கூடிய வித்தியாசமான ஒரு படிப்பு தான் இந்த பி.எஸ்சி. உளவியல் (சைக்காலஜி) படிப்பாகும். இந்த படிப்பை படிப்பவர்கள் நகைச்சுவை மிக்கவராக இருப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது. அதாவது எந்த விதமான பிரச்சனைகளையும் சரி செய்யும் திறன் இருக்கவேண்டும். பொறுமைசாலியாகவும், பிரச்சனைகளை கையாள கூடியவராகவும் இருக்கவேண்டும்.

பொதுவாகவே நாம் படிக்கும் பொழுது எந்த படிப்பாக இருந்தாலும் அந்த விஷயத்தின் அம்சங்கள் என்ன, அதனுடைய செயல்பாடுகள் என்ன, அதனுடைய பயன்பாடுகள் என்னவென்று தான் தெரிந்துகொண்டு படிப்போம்.

உதாரணத்திற்கு உடல் பற்றி படிக்கும் பொழுது அந்த உடல் உறுப்புகளின் வேலைப்பாடுகள் என்ன, அந்த வேலையால் ஏற்பட கூடிய பயன்கள் என்ன, இதனால் ஏற்பட கூடிய தீமைகள் என்னவென்று படிப்போம். அதே போல்தான் ஒருவரின் மனதை பற்றி படிப்பது ஆகும்.

உடலால் ஏற்பட கூடிய செயல்கள்  என்பது வேலை என்று சொல்படுக்கிறது, அதேபோல்தான் மனதால் ஏற்படக்கூடிய செயலை நடத்தை என்று சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒருவரின் மனதில் ஏற்படகூடிய எண்ணங்களும் அவற்றால் ஏற்பட கூடிய நடத்தைகளும் தான் சைக்காலஜி என்று கருதப்படுகிறது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement