சாலையில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன..?

Reason For Traffic Signs in Tamil

Reason For Traffic Signs in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு சாலையை தான் பயன்படுத்துகிறோம். அப்படி சாலையை பயன்படுத்தும் போது ஒரு சில குறியீடுகளை பார்த்திருப்போம். சாலையில் முக்கியமான இடங்களில் ஒரு சில குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த குறியீடுகளுக்கான அர்த்தம் ஒரு சிலருக்கு தெரியும். அதுபோல ஒரு சிலருக்கு தெரியாது. அந்த வகையில் சாலையில் இருக்கும் குறியீடுகளின் அர்த்தத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..?

சாலை குறியீடுகளின் அர்த்தம் என்ன..? 

 சாலையில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு போக்குவரத்து அடையாளங்களை பற்றி தெரிந்து கொள்வது என்பது அனைவரின் கடமையாகும் . அதுபோல சாலையின் அடிப்படை விதிகளை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் முதலில் வாகனம் ஓட்டுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து போக்குவரத்து அடையாள குறியீடுகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் நம் இந்திய நாட்டில் மொத்தம் 3 வகையான சாலை அடையாளங்களை பின் பற்றி வருகிறோம். அந்த அடையாளங்களுக்கான அர்த்தத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

கட்டாய குறியீடுகள்: 

கட்டாய குறியீடுகள்

இந்த குறியீடுகள் கட்டாய குறியீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த குறியீடுகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சாலை அடையாளங்கள் ஆகும்.  இந்த அடையாளங்கள் வேக வரம்புகள், பார்க்கிங் இல்லாத பகுதிகள் மற்றும் மெதுவாக செல்லும் பகுதி போன்ற குறிப்பிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்திற்காகவும், அதேப்போல சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன .

மேலும், இந்த அடையாளங்களை பின்பற்ற தவறினால் போக்குவரத்து காவலர்களால் தண்டனைகள் அல்லது அபாரதங்கள் விதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், போக்குவரத்தின் இலவச இயக்கம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சாலைகளில் மூன்று விளக்குகள் உணர்த்தும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா.?

எச்சரிக்கை குறியீடுகள்:

எச்சரிக்கை குறியீடுகள்

இந்த குறியீடுகள் அனைத்தும் எச்சரிக்கை குறியீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.  சாலையில் உள்ள பாதுகாப்பு அபாயங்களை சாலை பயனாளிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அடையாள குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன .

இந்த குறியீடுகள் அனைத்தும் சூழ்நிலைகளை கையாளுவதற்கும், அதேபோல வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் குறியீடுகள்: 

தகவல் குறியீடுகள்

இந்த குறியீடுகள் அனைத்தும் ஒரு வகையான போக்குவரத்து ஆகும்.  அதாவது, நீங்கள் செல்லும் சாலையில் இந்த குறியீடுகள் இருந்தால் அந்த சாலையின் அருகிலே அதன் வசதிகள் இருக்கிறது என்று அர்த்தம்.  உதாரணமாக பெட்ரோல் பேங்க் போன்ற குறியீடு இருந்தால், அந்த சாலையில் பெட்ரோல் பேங்க் வசதி இருக்கிறது என்று அர்த்தம் .

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil