ராஜினாமா லெட்டர் இன் தமிழ் | Job Relieving Letter Format in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பதவி விலகளுக்கான ராஜினாமா கடிதம் எப்படி எழுத வேண்டும் என்ற முறையை பார்க்கலாம். எல்லோருமே படித்து முடித்துவிட்டு ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்திருப்போம். ஒரு சில சூழ்நிலைகளில் நாம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதற்கான சூழல் காணப்படும். அப்போது நாம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியரும்போது தங்களை பற்றியும், நிறுவனத்தில் பணிபுரிந்தற்கான அனுபவத்தையும் எழுதி தருவது தான் ராஜினாமா கடிதம். வாங்க ராஜினாமா கடிதம் எழுதுவதற்கான முறையை படித்து தெரிந்து கொள்ளலாம்.
ராஜினாமா கடிதம் மாதிரி:
- கடிதம் எழுதும்போது தாளின் இடது பக்கத்தில் தேதியை குறிப்பிடவும். வலது பக்கத்தில் பெயர், முகவரி, இடம் ஆகியவற்றை குறிப்பிடவும்.
- பின் இடது பக்கத்தில் நிறுவனத்தின் பெயர், முகவரி, இடம் போன்றவற்றை எழுதி கொள்ளவும். பிறகு தாங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து விலகுவதற்கான காரணத்தை எழுதவும்.
- இறுதியாக வலது பக்கத்தில் தங்களுடைய பெயரை எழுதி கையெப்பமிடவும்.
- ராஜினாமா கடிதம் எழுதும்போது சுருக்கமாக எழுதுவது நல்லது. கடைசி தேதி, வெளியேறுவதற்கான காரணம், அறிவிப்பு காலம் போன்றவற்றை எழுத வேண்டும். பனி விடைபெறும் கடிதத்தில் தேவையானவற்றை மட்டும் குறிப்பிடுவது நல்லது.
- உங்கள் நிறுவனத்தில் உள்ள புதிய ஊழியர்கள் மற்றும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு கஷ்டம் கொடுக்காத வண்ணம் எழுதுவது நல்லது. கடைசியாக நன்றி தெரிவித்து முடிக்கவும்.
ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படி? | Resignation Letter Format in Tamil
தேதி:
பெயர்: XXX
முகவரி: XXX
இடம்: XXX
நிறுவனத்தின் பெயர்: XXX
முகவரி: XXX
இடம்: XXX
பொருள்: ராஜினாமா கடிதம்
அன்பிற்குரிய மேலாளர் அவர்களுக்கு,
- நான் கடந்த ஆண்டுகளாக (நிறுவனத்தின் பெயர்) பணிபுரிந்து வந்தேன். நான் இப்பொழுது பணிபுரிந்து இருக்கும் (பதவியின் பெயர்) பதவியிலிருந்து விலகி கொள்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
- நீங்கள் எனக்கு அருமையான சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளீர்கள். எனது திறமைகளை வளர்ப்பதற்கு பல விதங்களிலும் இந்த நிறுவனம் உதவியுள்ளது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். நான் எனது வாழ்க்கையை தொடங்கும்போது இந்த நிறுவனத்தில் கிடைத்த அனுபவம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- என்னுடைய சக பணியாளர்கள், பல விதத்திலும் எனக்கு உதவியாக இருந்தார்கள். இந்த நிறுவனத்தில் கிடைத்த அனுபவத்தையும், மகிழ்ச்சியான சூழலையும் விட்டு செல்வது வருத்தமடையச் செய்கிறது. உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் மற்ற காலத்தில் எவ்வாறு உதவ வேண்டும் என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
தங்கள் உண்மையுள்ள,
பெயர்: XXX
(கையொப்பம்)
ஆசிரியர் பணி விலகல் கடிதம் மாதிரி | Relieving Letter Format For School Teacher in Tamil
தேதி:
பெயர்: XXX
முகவரி: XXX
இடம்: XXX
நிறுவனத்தின் பெயர்: XXX
முகவரி: XXX
இடம்: XXX
பொருள்: ராஜினாமா கடிதம்
அன்புள்ள திரு/ திருமதி அவர்களுக்கு,
- நான் (பள்ளியின் பெயர்) பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக (வகுப்பின் பெயர்) ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்தேன், இப்போது என் பதவியில் இருந்து விலகுகிறேன், என்னுடய ராஜினாமாவை ஏற்று கொள்ளுங்கள்.
- என் மாணவர்கள் பல ஆண்டுகளாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறார்கள், பள்ளி நிர்வாகத்தோடு என் ஆட்சியின் போது நிர்வாகம் மிகவும் ஆதரவாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
தங்கள் உண்மையுள்ள,
பெயர்: XXX
(கையொப்பம்)
முறையான கடிதம் எழுதுவது எப்படி? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |