குடியரசு தின பாடல்கள் தமிழ் | Kudiyarasu Dhinam Tamil Songs
நமது இந்திய நாட்டில் ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. நமது இந்திய ஒரு குடியரசு நாடாக மாறிய நாள் ஜனவரி 26. இந்த தேசத்தின் வாழ்விலும், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்விலும் மிக முக்கிய நாள் இந்த ஜனவரி 26. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் சிறப்பு நாளாகும். சரி இந்த குடியரசு தினம் அன்று தங்கள் குழந்தைகள் தேசப்பற்று பாடல்களை பாடும் வகையில் இங்கு குடியரசு தின பாடல் வரிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்.
குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்கள்:
தினம் தினம்
இன்று குடியரசு தினம்;
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்;
ஆதிக்கம் படைத்த முடியாட்சி – அது
முடிந்துபோன கதையாச்சு;
அடிமை விலங்கை உடைச்சாச்சு – இது
ஆனந்தமான மக்களாட்சி;
உரிமை என்பது நம் உடைமை
உண்மை பேசுவதே வலிமை;
வாழ்வில் தேவை என்றும் எளிமை
எதிலும் கொள்ளாது இருப்போம் பெறாமை;
சுதந்திரம் கண்டது நம் பொறுமை – என்றும்
சுகத்தினை அளித்திடுவது ஒருமை;
நல் தலைவர் அமைவது பெருமை – அதற்கு
அனைவரும் வாக்கிடுவது நம் கடமை;
ஜெய்ஹிந்த்…!
தினம் தினம்
இன்று குடியரசு தினம்
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்…!!
தொடர்புடைய பதிவுகள் |
குடியரசு தினம் பற்றிய சுவாரசியமான தகவல் |
குடியரசு தின வாழ்த்துக்கள் 2024 |
குடியரசு தின வரலாறு |
மூவர்ண கொடியின் சிறப்பு |
செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் வரிகள் |
மேலும் பலவகையான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> | www.pothunalam.com |