ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் | Rowthiram Meaning in Tamil

Rowthiram Pazhagu Meaning in Tamil

ரௌத்திரம் பழகு அர்த்தம் என்ன தெரியுமா ? – Rowthiram Meaning in Tamil

ரௌத்திரம் பழகு meaning in tamil: வணக்கம்.. நண்பர்களே.. கோபம் என்பது அனைவரிடமும் ஒளிந்திருக்கும் ஒரு குணமாகும்.. இந்த கோபத்தினை நாம் அனைவரிடமும் காட்டிவிடவும் முடியாது. சிலர் சாதாரண விஷயத்திற்கு கூட கோபம் கொள்வார்கள். சிலர் என்னதான் பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இருப்பினும் ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மற்றவர்கள் கூறும் போது “ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி. இவ்வாறு ரௌத்திரம் பழகு என்பதற்கு என்ன பொருள் என்பதை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் – Rowthiram Pazhagu Meaning Tamil:

ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயமுள்ள கோபம் என்று சொல்லலாம். அப்படியென்ன நியாயமுள்ள கோபம் என்று நீங்கள் நினைக்கலாம். சரி அதற்கான விளக்கத்தை இங்கு நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏதோ ஒரு விஷயத்தில் அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம் என்றுமே தவறு இல்லை..

தேவையுள்ள இடத்தில், தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அந்த கோபத்தில் நிச்சயம் நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு” என்பதற்கான பொருள்.

அநீதி நடக்கும் ஒரு இடத்தில் நாம் அதனை எதிர்த்து கேட்பது தர்மம். ஆனால் அந்த இடத்தில் நாம் அமைதியாக இருப்பது மிகவும் கோழைத்தனமாகும். ஆகவே ஒருவர் கோபம் படவேண்டிய நேரத்தில் நிச்சயம் கோவம் கொள்ள வேண்டும். அதுவே தேவை இல்லாத விஷயமாக இருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்.

இன்று வெளியே நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், பெண் வன்கொடுமைகள் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் அனைவரும் “ரௌத்திரம் பழகாமையே” காரணம்.

இன்று வெளியே நடக்கும் அநீதிகள் நாளை நம் வீட்டிற்குள்ளும் நடக்கலாம். தவறை கண்டு தட்டி கேட்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு. அச்சம் தவிர்த்து “ரௌத்திரம் பழகுவோம்”  நன்றி வணக்கம்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil