பெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன்..!

ருது ஜாதக பலன்கள்..! Ruthu Jathagam Palan In Tamil..!

Ruthu Palangal In Tamil: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் பெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்னென்ன பலன்கள் உள்ளது என்பதை பற்றித்தான் விரிவாக பார்க்க போகிறோம். ஒரு பெண்ணின் ருதுவான காலத்தினை வைத்து அவள் வாழ்க்கையில் எப்படி இருப்பாள், கணவன் எப்படி அமைவார்கள், இரண்டு பேரின் தாம்பத்திய வாழ்கை முறையின் அமைப்பு, வசதி வாய்ப்புடன் அந்த பெண் இருப்பார்களா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா, சண்டைகள் நிறைந்த குடும்பத்தில் போராடுபவர்களாக இருப்பவர்களா என்பதை பற்றி எல்லாம் இந்த ருது ஜாதகத்தினை வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த ஜாதகமானது பெண் பிறக்கும் போது சந்திரன் என்ற இடத்தினை கொண்டும், லக்னம் கொண்டும் பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பெண் ருதுவான ஜாதகத்திலும் சந்திரன் என்ற நட்சத்திரத்தினை கொண்டும் ருதுவான லக்னத்தினை கொண்டும் அந்த பெண்ணின் பலன்கள் சொல்லப்படுகிறது. மேலும் ருதுவான நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம் அனைத்திற்கும் தனியாக பலன்கள் உள்ளன. ஒரு பெண் எந்த நாளில் ருதுவாகிறார்களோ அந்த நாளின் கிரகத்திற்குரிய கதிர்கள் அவர்களின் உடல் அதிகமாக கிரகிகின்ற படியால் அந்த நாளின் கிரகத்தின் பலனை அதிகமாக அடைவார்கள் என்பது ஜோதிடத்தின் சாஸ்திரம். சரி இப்போது பெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன் உள்ளது என்பதை பற்றி தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

newஎந்த வயதில் திருமணம் செய்தால் நல்லது..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

ஞாயிற்று கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

பெண் ஞாயிற்று கிழமையில் ருதுவாகின்றாள் என்றால் அதிகமாக உஷ்ண தேகம் உடையவளாக தோன்றுவாள். அதோடு அவர்களிடம் காதல் செயல்பாடுகள் அதிகமாக இருப்பவர்களாகவும், சூரியனுக்குரிய பிரகாசம் போன்ற புகழினை உடையவளாகவும் இருப்பாள். அதன் பின்பு புத்தி கூர்மையாகவும், படபடப்பு தன்மையினையும் கொண்டவளாக இருப்பார்கள். இந்த கிழமையில் ருதுவான பெண்களின் உடல் பொன் நிறத்தில் பிரகாசமாக இருப்பாள். இவர்களுடைய முகத்தில் அல்லது வலது கண்ணில் மச்சம், வடுக்கள் போன்ற அடையாளங்கள் காணப்படும்.

இவர்களுடைய வாழ்கை காலத்தில் தொடக்கத்திலும் சரி, முடிவிலும் சரி சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். இவர்களுக்கு புத்திர தோஷம் குறைவாக இருக்கும். புத்திர தோஷத்தினால் பிறக்க போகும் குழந்தை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்று கிழமையில் உத்திராடம், மூலம், அனுஷம் போன்ற நட்சத்திரங்கள் கொண்ட பெண் ருதுவானால் மிகவும் விசேஷ பலன்கள் உள்ளதாகவும் சில நூல்களில் கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு பின்பு அவர்களின் கணவர்களாலே அதிக நோய்வாய் படுவார்கள். அதோடு வறுமை வாழ்க்கையும் துன்பமும் அடைய கூடியவர்கள்.

திங்கள் கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

பெண் திங்கள் கிழமைகளில் ருதுவானால் குளிர்ச்சியான, பிரகாசம் பொருந்திய தேகத்தினை உடையவளாகவும், நீண்ட ரோமத்தினை கொண்டும், எல்லோரும் விரும்பும் சுபாவம் கொண்டவளாக இருப்பார்கள். அவர்களின் உறவினர்கள் அனைவரையும் பண்போடு உபசரிக்கும் குணம் கொண்டவர்கள். இவர்களின் கணவன் துன்பத்தில் இருந்தாலும் அந்த பெண் சென்றதும் பல நன்மைகளுடன் அந்த கணவன் வீட்டிற்கு வந்தடைவாள் என்றும் கூறப்படுகிறது. கிரக லக்ஷ்மி, கர்ப்பரசி, குணவதி என்று சொல்லக்கூடிய தகுதியானது திங்கள் கிழமையில் ருதுவான பெண்களுக்கு உரியவை ஆகும்.

திங்கள் கிழமையில் ருதுவான பெண்கள் நல்ல உடல் வளம் பெற்றவளாக இருப்பாள். கபம் போன்ற நோய்களால் மிகவும் பாதிக்கப்படுவாள். இந்தக் கிழமையில் ருதுவான பெண்களுக்கு அதிகமாக பெண் குழந்தை தான் பிறக்கும். இந்த பெண் மனோரம்மியமான கற்பனாசுபாவம் கொண்டவளாகவும், வெண்ணிறமான ஆடை, நகைகள் அணிவதை அதிகமாக விரும்புவாள். திங்கள் கிழமையில் அஸ்வினி நட்சத்திரத்தில் ருதுவான பெண் சில காலங்களில் வறுமையினையும், துக்கத்தினையும் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. பரணி நட்சத்திரத்தில் ருதுவான பெண்கள் பொறாமை குணமும். யாரையேனும் நிந்தித்து கொண்டிருக்கும் சுபாவம் உடையவளாக இருப்பாள்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

செவ்வாய் கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

பெண் செவ்வாய் கிழமையில் ருதுவானால் சிகப்பு நிற வஸ்ர, தானியங்களுக்கு செவ்வாய் கிழமை அதிபதி. இந்தக் கிழமையில் ருதுவாகவும் பெண்கள் மிகவும் கடுமையான சுபாவம் கொண்டவளாக இருப்பாள். செவ்வாய் கிழமைகளில் ருதுவாகும் பெண்கள் முன்கோபமாக இருப்பாள். இவர்கள் சிகப்பு நிற ஆடைகளில் ஆர்வத்தினை கொண்டவர்களாய் தோன்றுவார்கள். அதோடு இந்த பெண்கள் துன்பம், துயரத்தினை அனுபவிப்பவளாகவும், இந்த பெண்ணின் வீடு தரித்திரம் கொண்டு இருக்கும். இந்த பெண்ணினால் வீட்டில் சில நஷ்டங்களும், பொருள் சேதங்கள் ஏற்படும். இவர்களின் குழந்தைகளுக்கும், நெருங்கிய சகோதரர்களுக்கும் நிறைய கஷ்டங்கள் உண்டாகும்.

செவ்வாய் கிழமையில் ருதுவான பெண் அவர்களின் கணவர்களாலே பாக்கியத்தினை அடைவார்கள். செவ்வாய் கிழமையில் பிறந்த பெண்கள் செல்லும் இடத்தில் சீரும் சிறப்புமாக விளங்குவாள். எதிர்காலங்களிலும் தர்த்தரியம் போன்றவைகளை அனுபவிப்பாள் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் ரோகிணி, சித்திரை நட்சத்திரம் கொண்ட ருதுவான பெண்கள் வாழ்க்கை, குறைபாட்டுடனும், கிரக நிலை அனுசரித்து அவள் மலடியாக இருப்பாள் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக இவர்களுக்கு குறை பிரசவம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதன் கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

புதன் கிழமையில் ருதுவான பெண்கள் பலவீனமான மெலிந்த உடலை கொண்டு இருப்பார்கள். இந்த பெண்கள் மிகவும் புத்திசாலியாகவும், இரக்க குணத்தினை உடையவளாக இருப்பார்கள். எந்த ஒரு தொழிலையும் கண்ணில் பார்த்ததும் உடனே செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். தன்னுடைய வாழ்க்கையினை சீர்படுத்தி கொள்வதற்கு அவசியம் ஏற்பட்டால் அடுத்தவர்களை வஞ்சிப்பதற்கு சிறிதும் தயங்க மாட்டார்கள். புதன் கிழமையில் ருதுவாகும் பெண்கள் தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் சுகத்தினை அனுபவிப்பார்கள்.

இந்த பெண்கள் நல்ல மன வாழ்க்கையினையும், இன்பத்தினையும் அனுபவிப்பார்கள். இவர்களின் பெற்றோர் வழியில் இந்த பெண்ணுக்கு சில நஷ்டங்கள், கஷ்டமும் ஏற்படும். புதன் கிழமையில் ஆயில்யம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரம் உள்ள பெண்கள் ருதுவானால் அவர்களின் வாழ்வில் அடிக்கடி குறை பிரசவம் உண்டாகும். இவர்களுக்கு இளமை காலத்தில் தர்த்தரியம் மட்டும் அனுபவிக்கும் நிலை உண்டாகும்.

வியாழன் கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

வியாழகிழமை ருதுவாகவும் பெண்கள் அனைவரிடமும் தாயை போல் அன்பு காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். கணவன்மார்களிடம் இனியவளாக தோன்றுபவள். இவர்கள் ஒழுக்கமும், அமைதி நிலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். வியாழகிழமை ருதுவாகும் பெண்கள் வீட்டிற்கு தக்க ஆலோசனைகளை கூறி வழி நடத்துபவர்களாக இருப்பார்கள். இந்த கிழமையில் ருதுவாகும் பெண்கள் பொன், பொருள் ஆபரண வசதிகளை கொண்டு விளங்குவாள்.

இவர்களுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படும்.  இந்த பெண் ஆரம்ப காலத்தில் மகப்பேரு இல்லாமல் பிற்காலத்தில் புத்திர பாக்கியம் உடையவளாக இருப்பாள். வியாழ கிழமையில் திருவாதிரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் ருதுவான பெண்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு தானே உழைத்து முன்னேறுபவர்களாக இருப்பார்கள்.

வெள்ளி கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

வெள்ளி கிழமையில் ருதுவாகும் பெண்கள் காமத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருப்பார்கள். தன் கணவன்மார்களுக்கு மிகவும் இனிமை ஊட்டுபவர்களாக இருப்பார்கள். நடனம், சங்கீதம், போன்ற கலைகளில் பெரிதும் ஆர்வம் உடையவளாக இருப்பாள். இந்த பெண்கள் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியான, வளமான கிரக கட்டைகளை உடையவளாகவும், குளிர்ந்த கண்களும், வசீகரமான பேச்சாற்றலும், எவரையும் வசியப்படுத்தும் தன்மையும், பெரியவர்களுக்கு கீழ் படிதல் குணமும், வாழ்க்கையை விரும்பி ரசிக்கும் குணம் கொண்டவர்கள்.

இவர்கள் பொன், பொருள் வஷ்திர லாபங்களை உடையவளாக வசதியான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். பொதுவாகவே வெள்ளி கிழமையில் ருதுவான பெண்கள் கணவருக்கு அதிக விருப்பத்தினை உண்டாக்குபவளாக இருப்பார்கள். வெள்ளி கிழமை பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ருதுவாகும் பெண் தன் கணவனுக்கு பிறகே விதவை நிலையை அடைந்து இறப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

சனி கிழமையில் பெண் ருதுவானால் என்ன பலன்:

சனி கிழமையில் ருதுவாகும் பெண்கள் மந்தமான நிலையில் உடையவளாக இருப்பாள். உடலால் அதிக கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கை நடத்துபவளாக இருப்பாள். இந்த பெண் எவ்வளவு பெரிய செல்வமான குடும்பத்தில் புகுந்த போதிலும் இவள் காலை முதல் மாலை வரையிலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். பித்த சம்மந்தமான ரோகங்களும் மனதில் அதிக கஷ்டங்களை உடையவளாக இருப்பாள். அந்த பெண்ணுக்கு புத்திர தோஷமும், கணவருக்கு நோய்களும் உண்டாக கூடும். இந்த பெண்ணின் குடும்பம் நாளுக்கு நாள் மோசமான நிலையில் இருக்கக்கூடும்.

சனி கிழமையில் ருதுவாகும் பெண்கள் காதலில் விருப்பமின்றி, அசட்டை தன்மையும் கொண்டு இருப்பாள். பெரும்பாலும் தாம்பத்திய கலகத்தால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கும். சனி கிழமையில் அஸ்தம், சுவாதி நட்சத்திரத்தில் ருதுவாகும் பெண்கள் அவருடைய கணவன் அந்த பெண்ணின் மேல் வீண் பழிகளை சுமத்தி வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். அந்த பெண்ணும் தாய் வீட்டிலே தனது வாழ்க்கையினை செலுத்தும் படியாகவும், அந்த பெண்ணிற்கும் தாய் வீட்டில் அதிக ஆர்வம் உடையவளாக இருப்பாள்.

newபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்