சங்க இலக்கியம் | Sanga Ilakkiyam in Tamil
Sanga Ilakkiyam: நம் முன்னோர்கள் இயற்றிய சங்க இலக்கிய நூல்கள் அனைத்துமே கவிதை நயமும், சொற் நயமும் மிகுந்து காணப்படும் நூல்கள் ஆகும். அவற்றில் உள்ள கருத்துக்கள் யாவும் அக்காலத்தில் உள்ள மக்களுக்கும், இக்காலத்தில் உள்ள மக்களுக்கும் பயன்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. அப்படி பல சிறப்புகளை உடைய சங்க இலக்கிய நூல்கள் பற்றிய குறிப்பு மற்றும் எவையெல்லாம் சங்க இலக்கிய நூல்கள் மற்றும் அதனை இயற்றிய ஆசிரியர் பெயர்களையும் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சங்க இலக்கியம் என்றால் என்ன? – Sanga Ilakkiyam in Tamil:
- கி.மு. 500-இல் இருந்து கி.பி. 200 வரை எழுதப்பட்ட இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இந்த இலக்கியங்கள் 473 புலவர்களால் இயற்றப்பட்டுள்ளது.
- பெண்கள், மன்னர்கள் மற்றும் பல தொழில் புரிந்த புலவர்களும் இந்த இலக்கியத்தை இயற்றி உள்ளனர். 2381 பாடல்களை சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளது.
- பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் காதல், போர் முறை, வீரம், பொருளாதார நிலை, ஆட்சி போன்ற அனைத்து சிறப்புகளையும் சங்க இலக்கிய பாடல்கள் தெரிவிக்கின்றன.
- சில நூல்கள் அறப்பாடல்கள் அல்லது புறப்பாடல்களில் ஏதேனும் ஒரு கருத்தை விளக்கியுள்ளன. ஒரு சில நூல்கள் அகம், புறம் இரண்டு கருத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளன
- அக்காலத்தில் அதாவது 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களின் முயற்சியால் சங்க இலக்கியங்கள் இன்னும் வழக்கத்தில் இருக்கின்றன.
சங்க இலக்கியம் அகம் புறம் – Sanga Ilakkiyam:
- சங்க இலக்கியத்தில் அகம் என்பது அன்பு, காதல் ஆகியவற்றை விளக்குவது அகம் எனப்படும்.
- புறம் என்பது போர், வீரம் அரசர்கள், புலவர்கள், அடக்கம் போன்றவற்றை விளக்குவது ஆகும்.
சங்க இலக்கிய நூல்கள் யாவை? – Sanga Ilakkiya Noolgal
- எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் ஆகும். சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாக கருதப்படுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள் – Sanga Ilakkiyam:
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு
அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”
நூல்கள் | ஆசிரியர் |
நற்றிணை | தெரியவில்லை |
குறுந்தொகை | தெரியவில்லை |
ஐங்குறுநூறு | கபிலர் |
பதிற்றுப்பத்து | தெரியவில்லை |
கலித்தொகை | நல்லந்துவனார் (முதலான பலர் இயற்றியுள்ளனர்) |
அகநாநூறு | பலர் இயற்றியுள்ளனர் |
புறநாநூறு | |
பரிபாடல் | தெரியவில்லை |
பத்துப்பாட்டு நூல்கள் – Sanga Ilakkiyam:
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக்
காஞ்சி – மருவினிய கோலநெடு நல் வாடை கோல்
குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து
நூல்கள் | ஆசிரியர் |
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் |
பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் |
சிறுபாணாற்றுப்படை | நற்றாத்தனார் |
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
நெடுநல்வாடை | நக்கீரர் |
குறிஞ்சிப் பாட்டு | கபிலர் |
முல்லைப்பாட்டு | நப்பூதனார் |
மதுரைக் காஞ்சி | மாங்குடி மருதனார் |
பட்டினப் பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
மலைபடுகடாம் | பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் |
- இந்த எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – Sanga Ilakkiyam – சங்க இலக்கியம் நூல்கள்:
சங்க இலக்கிய நூல்கள் – Sanga Ilakkiyangal |
|
நூல்கள் | ஆசிரியர் பெயர் |
நாலடியார் | சமணமுனிவர்கள் பலர் |
நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் |
இன்னா நாற்பது | கபிலதேவர் |
இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார் |
திருக்குறள் | திருவள்ளுவர் |
திரிகடுகம் | நல்லாதனார் |
ஏலாதி | கணிமேதாவியார் |
பழமொழி நானூறு | மூன்றுரை அரையனார் |
ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் |
சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
முதுமொழிக்காஞ்சி | கூடலூர் கிழார் |
ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார் |
ஐந்திணை எழுபது | மூவாதியார் |
திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார் |
திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் |
கைந்நிலை | புல்லங்காடனார் |
கார்நாற்பது | கண்ணன் கூத்தனார் |
களவழி நாற்பது | பொய்கையார் |
தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள் |
தொல்காப்பியம் வரலாறு |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |