சீமந்தம் செய்ய உகந்த மாதம்..! Good Day for Baby Shower in 2024..!
Seemantham Dates: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் 2024-ம் ஆண்டின் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்ய உகந்த நாள் மற்றும் உகந்த மாதம் எப்போது உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். வளைகாப்பு என்பது நம்முடைய தமிழ்நாட்டில் இன்றும் மாறாமல் வழக்கமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிலர் வீட்டில் ஏழாம் மாதத்திலும், சிலர் வீட்டில் ஒன்பதாம் மாதத்திலும் வளையல் அணிவார்கள். சீமந்தம் செய்யும் போது அக்கம் பக்கத்து வீட்டார்கள், உறவினர்கள் அனைவரையும் அழைத்து 7 வகையான உணவுகளை பரிமாறி கர்ப்பிணி பெண்ணினை ஆசீர்வாதம் செய்ய சொல்வார்கள். சரி வாங்க நண்பர்களே நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்ய உகந்த நாள் (valaikappu dates in 2024) மற்றும் உகந்த மாதத்தினை இப்போது படித்தறியலாம்..!
7-ம் மாதம் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் என்று தெரியுமா? | கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..? |
வளைகாப்பு என்றால் என்ன?
வளையல் அணியும் விழா நடத்தும்போது கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் ஒரு தைரியம் பிறக்கும். கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு விழா அன்று அவர்கள் கையில் வேப்பிலை கட்டுவார்கள். வேப்பிலையானது எந்த வித நோயும் நம்மளை அண்டாமல் பாதுகாக்கும் ஒரு கிருமிநாசினி. வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு காரணம் இதுவே. கர்ப்பிணி பெண்களுக்கு அனைவரும் வளையல் அணிவார்கள். அந்த வளையலை உடைந்து போகாமல் நிதானமாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் வளையல் அணிவதன் நோக்கம் கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் பொறுமையாக செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த வளைகாப்பு என்பது இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வளைகாப்பு சாப்பாடு:
7 வகையான வளைகாப்பு சாதம்:
- சர்க்கரை பொங்கல் (அ) கற்கண்டு சாதம்
- புளிசாதம்
- எலுமிச்சை சாதம்
- தயிர் சாதம்
- வெஜிடபிள் பிரியாணி
- சாம்பார் சாதம்
- தேங்காய் சாதம்
கூட்டு வகைகள்:
- கத்திரி முருங்கை புளி கூட்டு
- புதினா சட்னி
- தயிர் வெங்காயம்
- ஊறுகாய்
- சாம்பார்
- அப்பளம், கலர் வற்றல்.
வளைகாப்பு தேவையான பொருட்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வதற்கு தேவையானவை:
- இரண்டு குத்து விளக்கு
- நறுமணம் உள்ள மலர்கள்
- பழ வகைகள்
- இனிப்புகள்
- மஞ்சள், குங்குமம்
- கண்ணாடி
- வளையல்
- 7 வகை சாதம்
எந்த நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் என்ன பலன் தெரியுமா? |
வளைகாப்பு செய்ய உகந்த மாதம் அக்டோபர் 2024:
நாள் | கிழமை |
03.10.2024 | வியாழக்கிழமை |
15.10.2024 | செவ்வாய்க்கிழமை |
20.10.2024 | ஞாயிற்றுக்கிழமை |
வளைகாப்பு செய்ய உகந்த மாதம் நவம்பர் 2024:
நாள் | கிழமை |
05.11.2024 | செவ்வாய்க்கிழமை |
07.11.2024 | வியாழக்கிழமை |
17.11.2024 | ஞாயிற்றுக்கிழமை |
19.11.2024 | செவ்வாய்க்கிழமை |
24.11.2024 | ஞாயிற்றுக்கிழமை |
26.11.2024 | செவ்வாய்க்கிழமை |
வளைகாப்பு செய்ய உகந்த மாதம் நவம்பர் 2024:
நாள் | கிழமை |
03.12.2024 | செவ்வாய்க்கிழமை |
05.12.2024 | வியாழக்கிழமை |
17.12.2024 | செவ்வாய்க்கிழமை |
22.12.2024 | ஞாற்றுக்கிழமை |
31.12.2024 | செவ்வாய்க்கிழமை |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |