செல்ஃபி தமிழ் அர்த்தம் | Selfie Meaning in Tamil

Advertisement

செல்ஃபிக்கு சரியான தமிழ் சொல்

மொபைலில் செல்ஃபி எடுப்பது என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சிறிய குழந்தைகள் கூட இப்போது செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். செல்ஃபி என்று நாம் அனைவரும் சொல்கிறோம். செல்ஃபி என்ற வார்த்தை எங்கிருந்து முதலில் வந்தது. அந்த வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா? வாங்க செல்ஃபி என்ற ஆங்கில வார்த்தைக்கு அதன் தமிழ் அர்த்தம் (selfie meaning in tamil) என்ன என்பதை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

Vocabulary தமிழ் பொருள்

Selfie Meaning in Tamil:

  • செல்ஃபிக்கு சரியான தமிழ் அர்த்தம் தாமி ஆகும்.

selfie in tamil meaning: தாமி என்ற வார்த்தைக்கு தம்படம் என்று அர்த்தமாகும். மொபைலில் தம்மை தாமே போட்டோ எடுத்துக்கொள்வதை குறிக்கும் ஒரு சொல் ஆங்கிலத்தில் செல்ஃபி என்றும் தமிழில் தாமி என்றும் சொல்கிறார்கள்.

தாமி என்ற சொல்லானது முகநூல் (FB), கீச்சு (Tweets) போன்ற சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செல்ஃபி (Selfie) என்ற வார்த்தையை முதலில் யார் பயன்படுத்தியவர்?

செல்ஃபி என்ற ஆங்கில வார்த்தையை முதன் முதலில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நாதன் ஹாப் என்றவர் தான் முதன் முதலில் பயன்படுத்தி வந்துள்ளார்.

2003-ம் ஆண்டு நாதன் ஹாப் ஒரு சிறிய விபத்தில் உதட்டில் காயம் ஏற்பட்டு கட்டிலில் படுத்து இருந்தபோது அவருடைய உதட்டை அவரே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த செல்ஃபி என்ற வார்த்தைதான் இன்று ஆங்கிலத்தில் ஒரு புதிய வார்த்தையாகவே சேர்க்கப்பட்டது.

இந்த பதிவு மூலம் செல்ஃபி என்ற ஆங்கில வார்த்தைக்கு அதன் தமிழ் வார்த்தைதையை தெரிந்துகொண்டமைக்கு நன்றி..

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement