சிலப்பதிகாரம் குறிப்பு வரைக | Silapathikaram Kurippu Varaiga
சிலப்பதிகாரம் சிறப்புகள்: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியரால் போற்றப்பட்ட நூல் சிலப்பதிகாரம். இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான நூலாக தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியமாக திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என ஐம்பெருங்காப்பியங்கள் இருந்த போதிலும் சிலப்பதிகாரம் ஒரு தனிச்சிறப்பை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருங்காப்பியத்தை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க.
சிலப்பதிகாரம் ஆசிரியர் குறிப்பு:
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். இவர் சேர குலத்தை சேர்ந்தவர். தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சரலாதன். தாயின் பெயர் நற்சோணை. சகோதரரின் பெயர் சேரன் செங்குட்டுவன். இவர் சாதி மதம் என்ற பாகுபாடு இல்லாத துறவி ஆவார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கேணுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதியரால் போற்றப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.
சிலப்பதிகாரம் சிறப்புகள் – காப்பியம் அமைப்பு:
- இந்நூல் சங்க காலத்திற்கும், தேவாரக் காலத்திற்கும் இடையில் எழுதப்பட்டதால் இது சமண காப்பியம் ஆகும். பல காப்பியங்கள் அரசனையும், கடவுளை பாட்டின் தலைவனாக இயற்றப்பட்டு வந்த காலத்தில் கோவலன் என்ற குடிமகனை தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட முதல் நூல் சிலப்பதிகாரம் என்பதால் இதற்கு குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
- கோவலன் மற்றும் கண்ணகி இரண்டு பேருக்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சேர, சோழ, பாண்டிய போன்ற ஒவ்வொரு மன்னர்களின் முன்னிலையில் மதுரை, பூம்புகார், வஞ்சி ஆகிய ஒவ்வொரு தலைநகரங்களில் நடைபெறும்.
மன்னர்கள் |
துறைமுகம் |
தலைநகரம் |
சேரன் |
முசிறி |
வஞ்சி |
சோழன் |
காவிரி பூம்பட்டினம் |
பூம்புகார் |
பாண்டியன் |
கொற்கை |
மதுரை |
- காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கோவலன் நாட்டின் பாரம்பரியப்படி கண்ணகியை திருமணம் செய்து இல்லறம் நடத்தி வந்த கோவலன் மற்றும் கண்ணகியின் வாழ்க்கை சிறப்பை எடுத்து கூறும் நூல். இந்நூல் மூன்று காண்டம் மற்றும் முப்பது காதைகளை உடையது.
காண்டம் |
காதைகள் |
புகார்க்காண்டம் |
10 |
மதுரைக்காண்டம் |
13 |
வஞ்சிக்காண்டம் |
7 |
பெயர்காரணம் – சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்:
சிலப்பதிகாரம்= சிலம்பு + அதிகாரம். இக்கதை கண்ணகியின் சிலம்பை மையமாக கொண்டு எழுந்ததால் இந்நூலிற்கு சிலப்பதிகாரம் என பெயரிடப்பட்டது.
சிலப்பதிகாரம் கூறும் அறம் – சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்:
இக்காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் என்று சொல்லக்கூடிய மூன்று பொருள்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கோவலன் மற்றும் கண்ணகி வசிக்கக்கூடிய வீடு பற்றி இந்நூலில் எடுத்துரைத்தாலும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியரின் நோக்கம் அறம் என்பதால் மக்களிடம் அறத்தின் பண்பையே கூறுகிறார்.
சிலப்பதிகாரம் சிறப்புகள் – Silapathikaram Kurippu:
- சிலப்பதிகாரத்திற்கு முன்பு தோன்றிய தொல்காப்பியம் போன்ற பல இலக்கியங்கள் அகத்திணை மற்றும் புறத்திணைகளான மனிதர்களின் உணர்ச்சியை பொதுவாக எடுத்துரைத்தன. ஆனால் சிலப்பதிகாரம் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் மனித சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மைகளை எடுத்துரைப்பதற்கு எழுந்த முதல் இலக்கியமாகும்.
- இக்காப்பியம் தலைவனை மையமாக கொண்டு எழுந்தாலும் ஆனால் சிலம்பில் கண்ணகி தன்நிகரில்லாத தலைவியாக தோன்றுகிறாள்.
- தமிழின் முத்தமிழ் காப்பியங்களான இயல், இசை, நாடகம் என்று முத்தமிழையும் எடுத்துரைத்துள்ளதால் இக்காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்:
அரசியல் பிழைத்தோருக்க அறங்கூற்றாகும்”.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”
- என்ற மூன்று உண்மைகளையும் கருப்பொருளாக கொண்டு சிலப்பதிகாரம் அமைந்துள்ளது.
- சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு தமிழர் பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள இக்காப்பியம் பெரிதும் பயன்படும்.
Silappadikaram Veru Peyargal in Tamil – Silapathikaram in Tamil
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் |
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் |
முதற் காப்பியம் |
முத்தமிழ் காப்பியம் |
நாடகக் காப்பியம் |
ஒற்றுமைக் காப்பியம் |
குடிமக்கள் காப்பியம் |
சமணம் ஆயினும் சமயச் சார்பற்ற காப்பியம் |
ஒருமைப்பாட்டு காப்பியம் |
மூவேந்தர் காப்பியம் |
போராட்ட காப்பியம் |
பொதுமை, வரலாற்று காப்பியம் |
பைந்தமிழ் காப்பியம் |
பத்தினிக் காப்பியம் |
முதன்மைக் காப்பியம் |
புதுமைக் காப்பியம் |
புரட்சிக் காப்பியம் |
- இது போன்ற பல கருத்துக்களையும், பல சிறப்புகளையும் கொண்டுள்ளது சிலப்பதிகாரம் ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> |
Today Useful Information in tamil |