சூரிய குடும்பம் என்றால் என்ன? | Solar Family in Tamil
Solar System in Tamil – வணக்கம் இன்றைய பதிவில் சூரிய குடும்பம் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சூரிய குடும்பம் பற்றி நாம் பள்ளி பருவத்தில் படித்தறிந்திருப்போம் ஓரளவு. இருப்பினும் இந்த பதிவில் ஓரளவு கோள்கள் பற்றிய தகவல்களை தமிழில் முழுமையாக படித்தறியலாம். சூரியனையும், சூரியனை சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உள்பட சிறிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சரி நாம் பூமி உள்ளிட்ட சூரியனை சுற்றி வரும் 8 கோள்கள் பற்றிய தகவல்களை படித்தறியலாம் வாங்க.
கோள்கள் பற்றிய தகவல்களை தமிழில்:
சூரிய குடும்பம் கோள்கள்:
- புதன் (Mercury)
- வெள்ளி (Venus)
- பூமி (Earth)
- செவ்வாய் (Mars)
- வியாழன் (Jupiter)
- சனி (Saturn)
- யுரேனஸ் (Uranus)
- நெப்டியூன் (Neptune)
- புளூட்டோ (Pluto)
சூரியன் – solar system in tamil:
கோள்களை கிரகங்கள் என்றும் சூரியனை (solar system in tamil) விண்மீன், நெருப்புக்கோளம் என்றும் அழைக்கின்றனர். சூரியன் அதிக வெப்பம் கொண்டது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். என்றாலும் இதன் துணையின்றி உலகில் உயிரினங்கள் வாழ முடியாது என்பதும் உண்மை. கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் சூரியனை மிகப் பெரிய வெப்பப்பந்து என்று குறிப்பிட வேண்டும்.
புதன் கோள் பற்றிய தகவல் (Mercury Planet in Tamil):
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் ஆகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும்.
- இதுவே சூரிய குடும்பத்தில் முதல் கோளாகும். மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே விரைவாக சுற்றி வருகிறது.
- இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
- புதன் கோளின் ஒரு பகல் என்பது 59 பூமி நாட்களாகும். ஒரு முழு நாள் 175.97 பூமி நாட்களாகும். புதன் சூரியனை முழுதும் சுற்றிவர (1 புதன் ஆண்டு) 88 பூமி நாட்களாகும்.
- புதன் கோளின் வெளியில் உயிர் வாயு, சோடியம், நீர்மவாயு, ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகியன உள்ளன. இதன் புறவெளி மண்டலத்தில் சூரிய வெப்பகாற்று மற்றும் சிறு குறு விண்கற்கள் மோதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள துகள்கள் நிரம்பியுள்ளன.
- இங்கு உயிர்கள் உயிர்வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. பகலில் இதன் வெப்பம் 430° செல்சியஸ் வரையும், இரவில் -180° செல்சியஸ் வரையும் இருக்கிறது. ஆகவே இங்கு உயிர்வாழ்வதற்கான சாத்திய கூறுகள் தென்படவில்லை. புதனை சுற்றி வளையங்கள் ஏதும் இல்லை.
- மேலும் புதனுக்கு என்று தனியாக நிலவு இல்லை. புதனின் நீள்வட்ட முட்டை வடிவ மந்தமான வட்டபாதையின் காரணமாக காலை சூரியன் உதித்ததும் மறைகிறது.
- சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனின் பளிச்சிடும் ஒளிக்கிடையே இதனை நாம் பார்க்க முடியாது. இருப்பினும் அதிகாலை சூரியன் தோன்றுவதற்கு முன்னர் அல்லது மாலை சூரியன் மறைந்த பின் புதன் கோளை தொடுவனத்தில் பார்க்க முடியும்.
வெள்ளி கோள் பற்றிய தகவல் தமிழில் (Venus Planet in Tamil):
- சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் கோள் வெள்ளி கோள் ஆகும். அதிக அளவில் ஒளிரும் வெள்ளிக்கோளை பூமியிலிருந்து அதிகாலையில் பார்க்க முடியும்.
- இது சூரியனை கிழக்கு மேற்காகச் சுற்றி வருகிறது. இது சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோள். சூரியனிடமிருந்து 10 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வருகிறது.
- சூரியனை சுற்றிவரும் கோள்களிலேயே அதிகம் வெப்பமான கோள் இதுதான். ஏனென்றால் இவற்றில் கார்பன்டைஆக்சைடு வாயு சூரியன் வெப்பத்தை அதிகளவு உள்வாங்கி கொள்ளும். ஆகவே இவற்றிலும் எந்த ஒரு உயிரினங்களும் வாழமுடியாது.
- இரவில் அதிகளவு பளிச்சென்று ஒளி வீசும் கோள் இதுதான்.
- இந்த வெள்ளி கோளிற்கு தனியாக நிலவு என்பது கிடையாது.
- வெள்ளி அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழலுகின்றது, இதனால் வெள்ளியில் சூரியன் மேற்கில் இருந்து கிழக்கில் மறைகிறது.
- வெள்ளி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 225 நாட்கள் ஆகும். அதாவது பூமியின் 225 நாட்கள் வெள்ளியின் ஒரு ஆண்டிற்கு சமம்.
- இதனை அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின் மாலை சூரியன் மறைந்த பின்னும் வானில் நாம் காணலாம். இது விண்மீன் இல்லை என்றாலும் இதை அனைவரும் காலை மற்றும் மாலை விண்மீன் என்றே அழைக்கின்றனர்.
செவ்வாய் கோள் பற்றிய தகவல்கள் – Solar System in Tamil:
- சூரியகுடும்பத்தில் இருந்து 4-ம் கோளாக செவ்வாய் கோள் அமைந்துள்ளது. இந்த செவ்வாய் பூமி மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கோள்களை விட மிகவும் சிறிய கோள் என்று சொல்லலாம்.
- இந்த கோள் பார்ப்பதற்கு லேசாக சிவப்பு நிறத்தில் இருப்பதால், இதனை சிவப்பு கோள் என்றும் அழைக்கின்றன. அதற்கு என்ன காரணம் என்னவென்றால் செவ்வாய் கோளில் அதிகளவு இரும்பு ஆக்சைடு நிறைந்துள்ளது.
- செவ்வாய் கோளை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகிறது.
- மேலும் இந்த ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட 0.375 தான் உள்ளது.
- பூமியின் அளவில் பாதியாக இருக்கும் இந்த செவ்வாய் கோள் மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.
- செவ்வாய் கோளிற்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளது. இந்த கோளில் மனிதர்கள் வாழ்வதற்கான ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்று பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகிறது.
வியாழன் கோள் பற்றிய தகவல்கள்:
- சூரிய குடும்பத்தில் இருந்து 5-வது கோளாக வியாழன் அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றிவரும் கோள்களிலேயே மிகப்பெரிய கோளாக வியாழன் அழைக்கப்படுகிறது. குறிப்பாக சொல்ல போனால் நம் பூமியை போன்று 1300 பூமிகளை அதனுள் அடக்க முடியுமாம்.
- இது ஒரு வாயுக்கோளாக அழைக்கப்படுகிறது, இவற்றில் இருக்கும் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.
- இந்த கோளை சுற்றி தூசி துகள்களாலான வளையங்கள் உள்ளதாம்.
- ஒரு நாள் என்பது வியாழன் கோளிற்கு 10 மணி நேரங்கள் மட்டுமே.
- இருப்பினும் இந்த கோள் சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு 12 ஆண்டுகள் ஆகுமாம்.
- இந்த வியாழன் கோளை சுற்றி 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் அதாவது நிலாக்கள் சுற்றி வருகிறதாம்.
சனி கோள் பற்றிய தகவல்கள் – Solar System in Tamil:
- சூரிய குடுமப்த்தில் இருந்து 6-வது கோளாக அழைக்கப்படுவது சனி.
- இதன் நிறம் மஞ்சள். வியாழனுக்கு அடுத்ததாக, அதாவது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டாவது கோளாக அழைக்கப்படுவது சனி.
- இந்த சனி கோளை சுற்றி அழகான ஏழு வளையங்கள் உள்ளதாம்.
- இந்த கோளின் ஒரு நாள் என்பது 10.7 மணி நேரங்களை கொண்டது.
- இக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 29 ஆண்டுகள்.
- இது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் சுழலும்.
- சனி கோளை 53 நிலாக்கள் சுற்றி வருகின்றதாம். மேலும் 29 நிலாக்கள் இதனை சுற்றுவதாக கருதப்படுகிறது.
மீதமுள்ள கோள்கள் பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |