Animals And Birds Sounds in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக மனிதர்கள் எப்படி பேசி, சிரித்து, அழுது, கத்துவதை போல விலங்குகளும் சத்தமிடும். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் வெவ்வேறு விதமான ஒலியை எழுப்புகின்றன.
அதில் ஒரு சில விலங்குகள் எழுப்பும் சத்தங்கள் ஒரு சிலருக்கு பிடிக்கும், பறவைகள் எழுப்புகின்ற சத்தம் அனைவருக்கும் பிடிக்கும். நாம் இந்த பதிவில் என்னென்ன மாதிரியான விலங்குகள், என்னென்னெ மாதிரியான பறவைகள் எப்படியெல்லாம் சத்தமிட்டு ஒலியை எழுப்புகின்றன என்பதை பார்க்கலாம்.
Animal Sounds List in Tamil – விலங்குகளின் ஒலிகள்:
பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள்
|
விலங்குகளின் ஒலிகள் |
சிங்கம் |
கர்ஜிக்கும் |
யானை |
பிளிறும் |
புலி |
உறுமும் |
கரடி |
உறுமும் |
காளை |
எக்காளமிடும் |
பசு |
கதறும் |
முதலை |
சீரும் |
காண்டாமிருகம் |
எக்காளமிடும் |
செம்மறி ஆடு |
கத்தும் |
வரிக்குதிரை |
கனைக்கும் |
கழுதை |
கனைக்கும் |
கழுதை புலி |
கத்தும் |
Animal Sounds in Tamil Words – பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள்:
விலங்குகளின் ஒலிகள் |
எலி |
கீச்சிடும் |
முயல் |
கீச்சிடும் |
ஆடு |
கத்தும் |
நரி |
ஊளையிடும் |
பன்றி |
உறுமும் |
நாய் |
குரைக்கும் |
குரங்கு |
அலப்பும் |
பூனை |
சீறும் |
குதிரை |
கனைக்கும் |
தவளை |
கத்தும் |
ஓநாய் |
ஊளையிடும் |
ஒட்டகம் |
முணு முணுக்கும் |
Birds Sounds in Tamil – பறவைகளின் ஒலிகள்:
பறவைகளின் ஒலிகள் |
கோழி |
கொக்கரிக்கும் |
கிளி |
பேசும் |
குயில் |
கூவும் |
ஆந்தை |
அலறும் |
சேவல் |
கூவும் |
புறா |
குனுகும் |
மயில் |
அகவும் |
வண்டு |
முரலும் |
காகம் |
கரையும் |
வாத்து |
கத்தும் |
கூகை |
குழறும் |
தேனீ |
ரீங்காரமிடும் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |