ஏப்ரல் 30 சூரிய கிரகணத்தை எங்கு, எப்படி காணலாம் தெரியுமா?

Advertisement

Suriya Kiraganam 2022

சூரிய கிரகணம் 2022 எப்போது? – சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவை சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் வானிலை நிகழ்வுகளாகும். சூரிய கிரகணமானது சந்திரன் சூரிய ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை பூமியில் செலுத்தும் போது நிகழ்கிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரணம் இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. அதாவது 2022 ஏப்ரல் 30-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரணம் நிகழ உள்ளது அது குறித்த சில தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

சூரிய கிரகணம் 2022 எப்போது? – 30 April 2022 surya grahan timing

022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, சனிக்கிழமை மதியம் 12:15 முதல் மாலை 04:07 வரை இருக்கும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், இதன் விளைவு தென்/மேற்கு அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் காணப்படும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகரும் போது, ​​அதன் மூலம் பூமியில் நிழல் படுகிறது. அப்போது ​​சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது, ​​சூரியனின் ஒளி சில பகுதிகளில் ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கப்படும். இது முழு சூரிய கிரகணமாக இருக்கும் போது, ​​சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர் கோட்டில் காணப்படும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, அட்லாண்டிக்கின் தெற்கு பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும்.

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

கிரகணத்தை எங்கு காணலாம்?

இந்த குறிப்பிட்ட கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அண்டார்டிகாவின் யூனியன் பனிப்பாறையிலிருந்து வான நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. இந்த கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்று நாசா எச்சரித்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எத்தனை நிகழும் தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement