தமிழ் மொழி வாழ்த்து பாடல் வரிகள்..!
08-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ செல்வங்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் தமிழ் பாட புத்தகத்தில் உள்ள தமிழ் மொழி வாழ்த்து பாடல் வரிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள். மேலும் பொது அறிவு வினா விடைகளை, பழமொழி விளக்கம், விடுகதைகள், இலக்கணம் மேலும் தமிழ் மொழி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நமது பொதுநலம்.காம் முகப்பு பகுதியில் Search செய்து பாருங்கள். சரி வாங்க தமிழ் மொழி வாழ்த்து பாடல் வரிகளை இப்பொழுது நாம் கீழ் காண்போம்..
Tamil Moli Valthu Padal..!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
எங்கள் தமிழ்மொழி!…
எங்கள் தமிழ்மொழி!…
என்றென்றும் வாழிய வே!
– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |