தமிழ் மொழி பற்றிய அரிய செய்திகள் | Tamil Mozhi Patriya Seithigal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் மொழி பற்றிய அறிய தகவல்கள் (Facts About Tamil Language in Tamil) பற்றி கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே தமிழ் மொழி தான் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால். தமிழ் மொழியில் உள்ள தகவல்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை. ஆகையால், இந்த பதிவின் வாயிலாக Tamil Facts in Tamil தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகில் பல மொழிகள் இருக்கின்றன. மொழிகள் பேசுவதற்கும், எழுதுவதற்கும், தங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவுகிறது. இப்படி உதவும் மொழிகளில் ஒரு சில மொழிகள் தான் தனித்துவமாகவும், சிறப்பானதாகவும் திகழ்கிறது. அப்படி சிறப்பாக இருக்கும் மொழிகளில் முதன்மையாக இருப்பது தமிழ் மொழி. உலகில் தோன்றிய முதல் மொழி மற்றும் பண்பட்ட மொழி என்ற பெருமையுடையது தமிழ் என்று அனைவருக்கும் தெரியும், இது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளை உடையது தமிழ். நாம் இந்த பதிவில் தமிழ் மொழி பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ் மொழி பற்றிய கவிதை |
Tamil Facts in Tamil:
- இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளிலும் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
- 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
- முதன்முதலில் அச்சிடப்பட்ட இந்திய மொழி தமிழ். போர்த்துகீசிய மிஷனரிகள் 1578 ஆம் ஆண்டு கோவாவில் “தம்பிரான் வணக்கம்” என்ற தமிழ் பிரார்த்தனை புத்தகத்தை வெளியிட்டனர்.
- தமிழ் மொழியில் மொத்தம் 247 சேர்க்கைகள் உள்ளன!
- தமிழ் சுமார் 200000+ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது, அதற்கு முன்னர், இந்தியாவின் தெற்குப் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்த மனிதர்கள் தமிழ் பேசும் மக்களின் கீழ் கணக்கிடப்பட்டனர்.
- சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய பல இந்திய மொழிகளைப் போலல்லாமல், தமிழ் சுயாதீனமாகத் தோன்றியது!
Interesting Facts About Tamil Language in Tamil:
- இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.
- உலகில் பழமையான மொழிகள் பல உள்ளது அதில் 72 மில்லியன் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தமிழ் மொழியை இந்த உலகத்தில் பேசி வருகின்றனர்.
- காரைக்குடியில் தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக தமிழ் தாய் என்ற ஒரு கடவுள் அமைந்துள்ளது.
- இந்த உலகத்தில் தமிழ் பேசும் மக்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒரு சிலருக்கு தமிழை பேசவும், எழுதவும் தெரிவதில்லை.
- திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த முதல் மொழி என்ற பெருமை தமிழுக்கு உள்ளது.
- தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் தான் தமிழ் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் தங்களுடைய அலுவல் மொழியாகவும் உள்ளது.
தமிழ் மொழி பற்றிய அரிய செய்திகள்:
- உலகிலேயே பழமையான மொழிகள் எனப் பாராட்டப்படுபவை லத்தீன், கிரேக்கம், ஹிப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய 6 மொழி கள்தான். அவற்றில் லத்தீன், கிரேக்கம், எபிரேயம் இன்று இல்லை. அதேபோல் சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் இல்லை. மீதமுள்ள ஹிப்ரு, சீனம், தமிழ் மொழிகள் தான் இன்றும் பேசுவதற்கு மற்றும் எழுதுவதற்கு பயன்படுத்தபடுகிறது.
- பல விதங்களில் பேசப்படும் மொழியாக தமிழ் உள்ளது. தமிழ் மொழியை மக்கள் 22 விதங்களில் பேசி வருகின்றனர்.
- இடமிருந்து வலமாக எழுதும் மொழியில் தமிழ் தான் மிகவும் பழமையானது. தமிழ் மொழியை சான்றாக கொண்டு தான் இப்போது உள்ள மற்ற மொழிகள் இடமிருந்து வலமாக எழுதுகின்றன.
தமிழ் மொழி பற்றிய அரிய செய்திகள்:
- இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளில் தமிழ் தான் 60,000 கல்வெட்டுகளை கொண்டுள்ளது. மற்ற மொழிகள் 5% கல்வெட்டுக்களை கொண்டுள்ளது.
- குழந்தைகள் முதலில் அ என்ற எழுத்தையும், அம்மா என்ற எழுத்தையும் கூறுவார்கள். இந்த சொல்லுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது, எப்படியெனில் அ உயிர் எழுத்தையும், ம் மெய் எழுத்தையும், மா உயிர்மெய் எழுத்தையும் கூறுகிறது. இது தமிழ் மொழியின் கோட்பாடாகும்.
- உலகில் உள்ள பல மொழிகளுக்கு இலக்கணம் உள்ளது, அதில் தமிழ் தான் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் போன்ற அதிகாரங்களை வைத்து தமிழுக்கு இலக்கணத்தை தந்தவர் தொல்காப்பியர்.
- தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப்போல மொழியின் பெயராக இருப்பதைத் தவிர, ‘தமிழ்’ என்பதற்கு அழகு, இனிப்பு மற்றும் இயற்கை போன்று பல அர்த்தங்கள் உள்ளது.
- இப்பொழுது இணையத்தில் பல மொழிகள் உபயோகப்படுத்தப்படுகிறது, அதில் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் மொழியின் சிறப்பு பெயர்கள்:
- அகத்தியம்
- பொதிகை மொழி
- தொன்மையான மொழி
- திராவிட மொழி
- செம்மொழி
- பழமையான மொழி
- பைந்தமிழ் மொழி
தமிழ் மொழியின் சிறப்பு |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |