வங்கியை விட அதிக வட்டி தரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்..!

Advertisement

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதலீட்டு திட்டம் | Tamil Nadu Power Finance Fixed Deposit Scheme Details

Tamil Nadu Power Finance Fixed Deposit Scheme Details:- வணக்கம் நண்பர்களே தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் Fixed deposit திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். குறுகிய காலத்தில் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நீண்ட காலத்தில் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும் சேமிப்பு என்பது மிகவும் அவசியமாகும். நாம் குறைந்த காலத்தில் முதலீடு செய்யும் தொகை வட்டிகளுடன் நமக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். அப்பொழுது நமக்கு நினைவிற்கு வருவது என்னவென்றால் Fixed deposit மற்றும் Post Office திட்டங்கள் தான் முதலில் நமக்கு நினைவியிக்கு தோன்றும். தாங்கள் ஒரு ஸ்மார்ட் முதலீட்டராக மாற வேண்டும் என்று நினைத்தால் தங்களுக்கு TN Power Finance Fixed deposit திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் (TN Power Finance) தமிழ்நாடு அரசால் முழுக்க முழுக்க நிர்வகிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் சுமார் 27000 கோடி மேல் Fixed deposit தொகையை தனது கைவசம் வைத்து நிர்வகிக்கிறது. இந்த திட்டமானது RBI வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு NBFC  நிறுவனங்களுக்கு கீழ் இயங்கி வருகிறது.

முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..!

Tamil Nadu Power Finance Fixed Deposit Scheme Details

Tamil Nadu Power Finance Fixed Deposit

கால அளவு:-

இந்த தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதலீட்டு திட்டத்தின் கால அவகாசம் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

இரண்டு வகை திட்டங்கள்:-

இந்த திட்டமானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ஒன்று REGULAR INTEREST PAYMENT SCHEME (RIPS) மற்றொன்று Cumulative Interest Payment Scheme (CIPS).

  1. REGULAR INTEREST PAYMENT SCHEME (RIPS) என்பது முதல் வகை இவற்றில் தங்களின் முதலீட்டு தொகையின் வட்டியை மாதம் மாதம் அல்லது காலாண்டிற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை பெறவேண்டும் என்று நினைத்தால் இதனை தேர்வு செய்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  2. Cumulative Interest Payment Scheme (CIPS) என்பது இரண்டாவது வகையாகும். இவற்றில் தங்களின் முதலீட்டு தொகையின் வட்டியை தங்களுடைய முதிர்வு காலம் முடிவடையும் பொழுது அசலும், வட்டியுடன் பெறவேண்டும் என்று நினைத்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?

சாதாரணமாக அனைத்து இந்திய குடிமக்களும் இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். அதேபோல் தாங்கள் ஒரு NRI ஆக இருந்தாலும் இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..!

இந்த நிறுவனத்தின் தலைமையிடம்:

TN power finance

கணக்கு தொடங்குவது எப்படி?

முன்னெல்லாம் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால். நேரிடியாக அந்த நிறுவனத்திற்கு சென்று அங்கு விண்ணப்பங்களை பெற்று பின் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டியதாக இருந்தது.

அதன் பிறகு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்தும். தாங்கள் எவ்வளவு ரூபாய்க்கு கணக்கு தொடங்குகிறீர்களோ அந்த தொகைக்கு DD எடுத்து தபால் மூலமாக மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் ஆன்லைன் வசதிகளும் இப்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தங்கள் இந்த Tamil Nadu Power Finance Fixed Deposit திட்டத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் இப்பொழுதே ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய மொபையில் மூலம் https://www.tnpowerfinance.com/ இணையதள முகவரிக்கு சென்று தங்களுடைய கணக்கை தொடங்கலாம்.

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி?

வட்டி விகிதம் / tamil nadu power finance interest rates 2020:-

இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள கிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Power Finance Fixed Deposit Interest Rate 2020 Interest Rate

 

Tamil Nadu Power Finance Fixed Deposit Contact Number:-

  • TN power finance contact number – 044 46312345

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement