Thayin Manikodi Parir Song Lyrics in Tamil..! | தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் வரிகள்
இப்பதிவில் தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் வரிகள் (Thayin Manikodi Parir Song Lyrics in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக பள்ளியில் குடியரசு தினம், சுதந்திர தினம், தேச தலைவர்களின் பிறந்த நாள் போன்ற நாட்களில் நமது இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றுவார்கள். அப்பொழுது கொடி ஏற்றும்பொழுது. அந்த கொடிக்கு மரியாதையை செலுத்தும் வகையில் கொடி பாட்டினை அனைவருமே பாடுவார்கள். இருப்பினும் இந்த கொடி பாட்டு சிலருக்கு முழுமையாக தெரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் கொடி பாட்டினை அதாவது தாயின் மணிக்கொடி பாடல் வரிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
தாயின் மணிக்கொடி பாடல் வரிகள்..!
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
Thaayin Manikodi Paareer Iyrics in Tamil
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? – அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் – அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் – அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் – விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு – போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப – நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் – அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் – பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் – முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் – பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத – நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.