Laptop வாங்கும் போது இதை பார்த்து வாங்குங்க

Advertisement

New Laptop User Tips

இன்றைய கால கட்டத்தில் தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என்று அனைவரும் லேப்டாப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் புதிதாக மொபைல் வாங்கும் போது எப்படி கேமரா மற்றும் Storage பார்த்து வாங்குகிறோமோ அது போல லேப்டாப் வாங்கும் போதும் சில விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: 

things to consider while buying a laptop in tamil

 

லேப்டாப்  வேலைக்கு பயன்படுத்துவதாக இருந்தால் 14 அங்குலங்கள் அல்லது அதற்கும் குறைவான திரை அளவு உள்ளதாக இருக்க வேண்டும்.

அடுத்து 4 ஜிபி ரேம் குறைந்தபட்சம், ஆனால் 8 ஜிபி பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நிறைய வீடியோ மற்றும் புகைப்பட எடிட்டிங் செய்யப் போகிறீர்கள் என்றால், 16 ஜிபி ரேம் கொண்ட லேப்டாப் வாங்குவது சிறந்தது.

லேப்டாப் குறைந்தபட்சம் 4-6 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்க வேண்டும். எட்டு மணிநேர பேட்டரி நன்றாகக் இருக்கும்.

மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் உண்மையானதா..! பொய்யானதா..?

நீங்கள் புது லேப்டாப் வாங்கும் போது Display-வில் கவனிக்க வேண்டியது, Resolution 1920*1080 குறைவாக உள்ள லேப்டாப் வாங்காதீர்கள்.

அடுத்து Brightness 300 உள்ள லேப்டாப் வாங்க வேண்டும்.

அடுத்து colors பார்க்கும் போது லேப்டாப்பில் srgb என்று இருக்கும். srgb  எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு Natural ஆன colours-யை கொடுக்கும். அதுவே சில லேப்டாப்களில் ntsc என்று இருக்கும். Ntsc 72% இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

சாதரணமாக Refresh rate 60hz நார்மல் தான், அதுவே நீங்கள் game-காக பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிகமான Refresh rate உள்ளதை வாங்கினால் தான் பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும்.

மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வர வைப்பது எப்படி?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement