திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Thiruttu Povathu Pol Kanavu Kandal

திருடு போவது போல் கனவு வந்தால் | Thiruttu Povathu Pol Kanavu Kandal 

Thiruttu Povathu Pol Kanavu Kandal – நாம் காணும் கனவிற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கு ஆர்வமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அத்தகைய கனவுகளுக்கெல்லாம் பலன் உண்டு எனறு சொல்லிவிட முடியாது. ஆனால் நாம் காணும் ஒருசில நுணுக்கமான மற்றும் தனித்துவமான கனவுகளுக்கு கனவு சாஸ்த்திரம் அடிப்படையில் பொதுவாக பலன்களை சொல்ல முடியும். அந்த வகையில் இந்த பதிவில் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்பதை பற்றி படித்தறியலாம்.

திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

1 பொதுவாக திருட்டை பற்றிய கனவுகள் வந்தால், அது உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அச்சத்தில் இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

2. திருட்டை பற்றிய கனவுகள் பொதுவாக பல விதங்களில் தோன்றலாம். அதாவது உங்கள் வீட்டில் பணம், நகை திருட்டு போவது போல்,  வெளியே செல்லும்போது பர்ஸ், பை போன்ற பொருட்கள் திருட்டு போவது போல் என பல விதத்தில் கனவுகள் வரலாம்.

3 திருட்டு போவது போல் கனவு வருவது பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை குறிக்கும்.

4. மேலும் இத்தகைய கனவுகள் உங்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் நபர்களை பற்றி கூறும் அறிகுறியாகவும் இருக்கும்.

5. மேலும் இது போன்ற திருட்டை பற்றிய கனவுகள் உங்களுடைய எதிர்காலத்திற்கான எச்சரிக்கை என்று எடுத்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள். உங்களுடைய எதிர்காலத்தை நல்லதாக அமைத்து கொள்ள இப்போதே எதாவது இரு விஷயத்தை முயற்சி செய்யுங்கள்.

6. திருடு போவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த முயற்சிகள் கால தாமதமான பலனை தரும். எனவே,  நீங்கள் ஏதாவது விஷயத்தை முயற்சி செய்திருந்தால் அதனை நிதானத்துடன் செயல்படவும்.

7. நகை திருடு போவது போல் கனவு கண்டால் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

போலீஸ் கனவில் வந்தால் என்ன பலன்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil