தமிழ் திருமண அழைப்பிதழ் வாசகங்கள்| Tamil Marriage Invitation Word Format
வணக்கம் நண்பர்களே வீட்டில் நடக்கும் சுப காரியம் என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது அழைப்பிதழை நன்றாக அடிக்க வேண்டும் என்றுதான். அதிலும் திருமணத்திற்கான அழைப்பிதழ் மிக சிறப்பாக இருக்க அனைவரும் விரும்புவார்கள். திருமண அழைப்பிதழானது திருமணத்திற்கு வருகை தருமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அழைப்புக் கடிதம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு திருமணச் சடங்காக அழைப்பிதழ் கொடுப்பது நடைபெறுகிறது. ஒரு சிலருக்கு திருமண அழைப்பிதழை தூய தமிழில் அச்சடிக்க வேண்டும் என்று மனதில் ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவானது மிகவும் உபயோகமாக இருக்கும். வாங்க தூய தமிழில் திருமண அழைப்பிதழை எப்படி எழுதலாம் என்று பார்க்கலாம்.
திருமண வாழ்த்து கவிதைகள்..! |
தமிழ் திருமண அழைப்பிதழ் மாதிரி | திருமண அழைப்பிதழ் மாடல்:
**அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது**
இனியதோர் மணவிழா
அன்புடையீர்..!
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத்தமாம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ்
பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன்
எங்கள் திருமணம் இனிதே நடைபெறவிருக்கிறது
வாழ்வின் உன்னத கணங்களில்
உடனிருந்து வாழ்த்தும்படி
உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்..!
–பிரியங்களுடன் மணமக்கள்
தலைவன்: XXX
தலைவி: XXX
பொன்னான நேரம்: XXX
பொற்காலம்: XXX
நிகழிடம்: XXX
இருகரம் கோர்த்து இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்
தங்கள் நல்வரவை இனிதே விரும்பும்:
அடையாளம் காட்டிய அப்பா அம்மா..!
நல்வழி காட்டிய தாத்தா பாட்டிகள்..!
அன்பு காட்டிய பெரியப்பா பெரியமாக்கள் ..!
சிந்திக்க வைத்த சித்தப்பாக்கள் சித்திகள்..!
மதிப்புக்குரிய மாமாக்கள் அத்தைகள்..!
மனம் நிறைந்த அத்தான்கள் அக்காமார்கள்..!
அக்கறை கொண்ட சகோதர சகோதரிகள்..!
பண்பு படைத்த சம்மந்திகள்..!
மற்றும்
நெஞ்சம் நிறைந்த நண்பர்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information In Tamil |