சூரை மீன் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

Tuna fish benefits in tamil

சூரை மீன் | Tuna Fish in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் சூரை மீன் பற்றிய சில பயனுள்ள தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே அசைவ பிரியர்கள் எந்த ஒரு மீன் வகைகளையும் விட்டுவைக்காமல் சாப்பிடுவார்கள். அந்தவகையில் சூரை மீனும் ஒன்றாகும். இந்த சூரைமீனை சாப்பிடுவதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த சூரை மீன் எந்தவாகை இனத்தை சேர்ந்தது என்றும் இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கானாங்கெளுத்தி மீன் பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Tuna Fish in Tamil:

சூரை மீன் என்பது கானாங்கெளுத்தி வகையை சார்ந்த உவர்நீரில் வாழும் மீன் இனத்தை சார்ந்தவையாகும்.  இந்த மீன் ஆனது 5 பேரினங்களையும், மொத்தம் 15 இனத்தையும் கொண்டவையாகும்.

இந்த சூரை மீன் ஆனது அதிவேகமாக நீந்த கூடிய மீனாகும்.  அதோடு மஞ்சள் நிறத்தில் துடுப்புகளை கொண்ட சூரை மீனானது 75 கிலோ மீட்டர் வரையும் வேகமாக சொல்ல கூடிய திறனை கொண்டவையாகும்.

பொதுவாக இந்த சூரை மீன் வகைகள் வெப்பக்கடலில் அதிகமாக காணப்படுவதால் விற்பனைக்காக இவை பிடிக்கப்படுகின்றன.  இந்த மீன்கள் அதிகமாக பிடிக்கப்பட்டு வருவதால் தென் நில சூரை மீன்கள்  அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த சூரை மீன்கள் ஸ்கோம்பிரிடே என்னும் குடும்பத்தை சார்ந்தவையாகும்.

சூரை மீன் பயன்கள்:

இந்த சூரை மீன்கள் மாலத்தீவில் பிடிக்கப்பட்டு கொன்று அவை மாசி கருவாடாக தயாரிக்கப்பட்டு  உணவாவாக இலங்கை, தென்னிந்தியா, கேரளா, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள மக்கள் இதை உணவாக சாப்பிட்டு வருகின்றன.

இந்த சூறை மீனில் அதிகமாக முள்கள் இருப்பதில்லை, அதோடு இந்த சூரை மீன் மிருதுவாக இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கிறது, எனவே இவை அதிகமாக சாப்பிடப்பட்டு வருகிறது.

சூரை மீனில் நிறைந்துள்ள சத்துக்கள்:

ஓரு 100 கிராம் கொண்ட சூரை மீனில் நிறைந்துள்ள சத்துக்கள் பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் – 1.60 கிராம், கொலஸ்ட்ரால்- 3.0 மி.கிராம், ரெட்டினால் வைட்டமின் ஏ -26 மைக்ரோ கிராம், கரோட்டின் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, கலோரிகள் -136 , நீர்ச்சத்து – 10.4 கிராம், நைட்ரஜன் – 3.79 கிராம், புரோட்டின் – 23.7 கிராம், கொழுப்பு – 4.6 கிராம், சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்- 1.0 கிராம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

சூரை மீன் நன்மைகள்:

வளரும் குழந்தைகளுக்கு இந்த  சூரை மீன் கொடுப்பது நல்லது ஏனென்றால் இதில் புரதச்சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புசத்துக்கள் குறைவாகவும் இருப்பதால் இவை குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உணவு  பொருளாகும்.  இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் இந்த சூறை மீனை சாப்பிட்டு வருவதால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இயற்கையாகவே இந்த டூனா மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே இருக்கிறது.

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையில் உள்ளவர்கள், இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்தம் சீராக செல்வதற்கு இந்த சூரை மீன் உதவியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த சூரை மீன் சாப்பிடுவதால் சருமத்தை பாதுகாப்பகவும், மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும்  ரத்த அழுத்தம் , ரத்தசோகை உள்ளவர்கள் , நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள், கண் பார்வை பாதிப்புகள், நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் இந்த சூரை மீனை வாரத்தில் ஒருமுறையாவது சாப்பிட்டு வருவதால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com