வால் நட்சத்திரம் என்றால் என்ன?

Vaal Natchathiram Enral Enna

வால்  நட்சத்திரம் என்பது என்ன? | Vaal Natchathiram Enral Enna

வணக்கம் நண்பர்களே.. நமது சூரிய குடும்பம் பல ஆசிரியங்களையும், விநோதங்களை கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வினோதமான வால் நட்சத்திரத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ள போகிறோம். சரி வாங்க வால் நட்சத்திரம் என்றால் என்ன?. இந்த வால் நட்சத்திரம் எப்படி தோன்றுகிறது, வால் நட்சத்திரம் எங்கிருந்து வருகிறது? போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வால் நட்சத்திரம் என்றால் என்ன?

Dirty Snowballs

வால் நட்சத்திரம் என்பது ஒரு பனிப் பந்து போல் இருக்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட பாறைகள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீர்ப் பனி, மீத்தேன், அம்மோனியா மற்றும் தூசிகளும் கலந்து உருவானவை இந்த பனிப் பந்து. இதை ஆங்கிலத்தில் Dirty Snowballs என்று கூறுவார்கள்.

இந்த Dirty Snowballs-யின் வெளிப்புறம் உள்ள பனி, படிகம் போன்று இருக்கும் மற்றும் தூசுக்களும், கரிமச் சேர்மங்களும் கலந்திருக்கும். இந்த பனிப் பந்து போன்ற வால் நட்சத்திரம் தனக்கென ஒரு சுற்றுபாதையை அமைத்துக் கொண்டு சூரிய மண்டலத்தை சுற்றி வரும்

இந்த பனிப் பந்து நம்முடைய சூரியன் பக்கம் வரும் போது, அதன் உள்ள Nucleus என்று அழைக்கப்படும் உட்கரு சூரியனின் வெப்பத்தின் காரணமாக தளர்வடைந்து மேகம் போர்த்தியது போல் மாறும் இந்த நிலைக்கு coma என்று பெயர். இந்த coma பூமியின் விட்டத்தை விட 15 மடங்கு அதிகமாக இருக்கும்.

இப்படி வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றிவரும் போது பனிப் பந்தில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசித் துகள்கள் சூரியன் வீசும் அனற் காற்று மற்றும் வெப்பத்தினால் coma வில் இருந்து வெளியேறி சூரியனுக்கு எதிர் புறம் வால் போல் நீள்கிறது. இப்படி நீளும் வால் இரண்டு விதமாக பிரியும் ஒன்று தூசித் துகள்கள் நிறைந்த வால், வாயுக்கள் நிறைந்த வால். இந்த வால் போன்று நீளும் அமைப்பு 15 கோடி கிலோ மீட்டர் இருக்கும். வானியல் கணக்குப்படி ஒரு வானியல் அலகு என்று சொல்லுவார்கள்

இப்படித்தான் வால் நட்சத்திரம் அமைப்பு உண்டாகிறது உண்மையாக. இது உண்மையாகவே நட்சத்திரம் கிடையாது சூரியனைச் சுற்றிவரும் தற்காலிக கோள் போன்று தான்.

அதன் பின் நீண்டு உள்ள வால் போன்ற அமைப்பை பார்த்துதான் நாம் நட்சத்திரம் என்று எண்ணி வால் நட்சத்திரம் என்று அழைக்கிறோம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil