வந்தே மாதரம் தேசிய பாடல் வரிகள் | Vande Mataram Lyrics in Tamil

Vande Mataram Lyrics in Tamil

Vande Mataram Lyrics in Tamil – Patriotic Songs in Tamil

Patriotic Songs in Tamil:- நமது இந்திய தேசம் இனம், மொழி, வழி பலவாயினும் இணைந்தே வாழும் இந்திய தேசம்.. இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள்… இணை பிரியாத தேசமாகும். வேற்றுமையிலும் ஒற்றுமையை காட்டும் வித்தியாசமான தேசமாகும். இத்தகைய இந்திய தேசத்தை பற்றிய நிறைய தேசப்பற்று பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பாரதியார் பாடிய வந்தே மாதரம் பாடல் ஆகும். இந்த பாடல் வரிகளை இப்பொழுது படித்து மகிழலாம் வாங்க.

வந்தே மாதரம் தேசிய பாடல் வரிகள் – Vanthe Maatharam Tamil Lyrics:

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)தேசப்பற்று பாடல்கள் வரிகள் – வந்தே மாதரம் தேசிய பாடல் வரிகள் – Vande Mataram Lyrics in Tamil:

அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன்
வெய்யிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துளைதேன்
மனம் பித்தாய் போனதே.. உன்னை கண்கள் தேடுதே..
தொட கைகள் நீளுதே.. இதயம் இதயம் துடிக்கின்றதே..
எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்.. மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்.. ஆளாக்கி வளர்த்தாய்..
சுக வாழ்வொன்று கொடுத்தாய் பச்சை வயல்களை நீ பரிசளிதை
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் கண்களும் நன்றியால் பொங்குதே..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே..
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுமே..

தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை, அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை, பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..!!

வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..

செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் வரிகள்..!
குடியரசு தின பாடல்கள்

 

மேலும் பலவகையான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> www.pothunalam.com