வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி?

Advertisement

சொத்து வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி? | Veetu Vari Rasithu Peruvathu Eppadi Tamil

என்ன தான் நாம் சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் சரி, சொத்து வைத்திருந்தாலும் சரி அது நமது பெயரில் தான் இருக்கிறது என்பதற்கு சான்றாக வருடம் தோறும் சான்று பெற்றிருக்க வேண்டும். அவை வீட்டு ரசீது போன்றவை ஆகும்.  அதாவது வீடு என்றால் அதற்கான வீட்டு வரி ரசீது உங்கள் பெயரில் பெற்றிருக்க வேண்டும். சொத்து என்றால் அதற்கான சொத்து வரி ரசீது உங்கள் பெயரில் வாங்கி அரசுக்கு வரி செலுத்தி வர வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் இது தொடர்பான விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு தான் பிரச்சனை வரும். உதாரணத்திற்கு உங்கள் தந்தையின் பெயரில் வீடு இருந்திருந்தால், அதனை உங்கள் பெயருக்கு மாற்றி வரி செலுத்து வேண்டும். இந்த விஷயத்தை செய்யவில்லையென்றால். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம் வாக.

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி?

உங்களுடைய வீடு உங்கள் அம்மா அல்லது அப்பாவின் பெயரில் இருந்திருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் அல்லது உங்கள் முன்னோர்களின் சொத்தாக இருந்திருக்கலாம் அதனை உங்கள் பெயரில் வீட்டு வரி ரசீதாக மாற்றிருக்க வேண்டும்.

ஒரு நிலத்தை அல்லது வீட்டை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களிடம் இருந்து வாங்கிய வீட்டிற்கு கிரயம் என்று சொல்வார்கள் அந்த பத்திரம் வாங்கி. அதனுடன் பழைய வரி ரசீது மற்றும் நீங்கள் இன்றைய நாள் வரை அந்த வீட்டிற்கு சரியாக வரி கட்டிருக்க வேண்டும். அது தண்ணீர் வரியாக இருந்தாலும் சரி, வீட்டு வாரியாக இருந்தாலும் சரி அந்த வரியை அரசாங்கத்திற்கு பாக்கி எதுவும் இல்லாமல் சரியாக வரி செலுத்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி?

பிறகு ஒரு சாதரண வெள்ளை காகிதத்தில் அனுப்புநர், பெறுநர் மற்றும் உங்கள் கோரிக்கையை உள்ளிட்டு ஒரு கடிதம் எழுதவும் நீங்கள் வசிக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அல்லது கிராம ஊராட்சி எதுவோ அங்கு சமர்ப்பிக்கவும். பிறகு அவர்கள் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு பெயர் மாற்றம் செய்துகொடுப்பார்கள். உங்களுக்கு கடிதம் எழுத தெரியாது என்றால் ஒன்று கவலை இல்லை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று. வீட்டு வரி பெயரும் மாற்றம் செய்ய வேண்டியதற்கான விண்ணப்பத்தை வாங்கி அவற்றை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலத்தில் சமர்ப்பிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலமும் உங்களுக்கு ஒரு வாரத்தில் வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தரப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement