அசையும் மற்றும் அசையா சொத்து என்றால் என்ன? | What is Asaiyum Sothu Asaiya Sothu in Tamil
வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவானது அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு பதிவு தான். அப்படியென்ன பதிவு என்று கேட்கிறீர்களா! சொத்து வகைகளில் அசையும் சொத்து, அசையா சொத்து என்று உள்ளது. சிலருக்கு இன்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்ன என்பது தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே தெளிவாக அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என்பதை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி? |
சொத்து என்றால் என்ன:
அசையும் சொத்து அசையா சொத்து என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு நாம் சொத்து என்றால் என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அசையும் சொத்து அசையா சொத்து என்பதை நாம் பிரித்து தெரிந்து கொள்ள முடியும்.
அசையும் சொத்து: அசையும் சொத்துக்கு எடுத்துக்காட்டு, தங்க நகைகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவைகளை நாம் அசையும் சொத்தை பற்றி ரியல் எஸ்டேட்டில் அதிகமாக பேச தேவையில்லை.
அசையா சொத்து: அசையா சொத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு நிலங்கள் தான். நிலங்களை வாங்கும் போதோ அல்லது விற்பனை செய்யும் போதோ தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
ஆக சொத்து என்பதனை நாம் எதை சொல்கிறோம் என்றால் தொடர்ந்து அந்த சொத்திலிருந்து நமக்கு இலாபம் மற்றும் வருமானம் வந்து கொண்டு இருக்கும். அதனை விற்று வெளியேறலாம். அந்த சொத்துக்களை வைத்து கடன் தொகை ஈசியாக வாங்கலாம்.
ரியல் எஸ்டேட் தொழிலானது அசையா சொத்தை வியாபாரம் செய்து லாபம் காண்பது தான். எனவே அசையா சொத்தை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் அதன் மதிப்பை கணக்கீடப்பட்டு முத்திரை தாளினை மறக்காமல் பதிவு அலுவலகரிடமிருந்து வாங்க வேண்டும்.
அந்த நேரத்தில் உங்களுக்கு எது அசையும் சொத்து எது அசையா சொத்து என்ற குழப்பங்கள் வரும். இதனை வைத்து சொத்துக்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
அசையா சொத்து என்பது கால நிலம் மனைகள், வயல் காடு, பண்ணைகள் தோட்டங்கள் அதன் மேல் இருக்கின்ற கட்டிடம், வீடு, கிணறு, மின் இணைப்புள்ள மோட்டார்கள், அதன்மீது தலைமுறை தலைமுறையாக இருந்துவிடும் உரிமைகள், மேலும் பாதை, வழி, வண்டிபாட்டை, சாலை மீதுள்ள உரிமைகள், படகுத்துறை மீன் வளங்கள் ஆற்று நீர், ஏரி நீர் உரிமை போன்றவற்றில் உள்ள உரிமைகள் எல்லாம் அசையா சொத்துக்கள்.
அசையா சொத்து என்பது உதாரணத்திற்கு ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் பல எந்திர தளவாடங்கள் தரையோடு தரையாக சேர்ந்து இருக்கிறது என்றால் அது அசையா சொத்தாகும்.
அந்த எந்திர தளவாடங்களை பிரித்து எடுக்க முடியும். ஆனாலும் பிரித்தெடுக்காமல் விற்பனை செய்தால்அந்த பொருளையும் அசையா சொத்தாக கணக்கில் சேர்த்து அதற்கும் பதிவு கட்டணம் கட்டி பதிய வேண்டும்.
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? |
தொழிற்சாலை எந்திரங்களை பதிவு செய்யாத ஆவணத்தின் உரிமம் மாற்றினால் அந்த உரிமம் செல்லாது. அதுவே பிரித்து எடுத்து பதிவு செய்யாமல் விற்றும் கொள்ளலாம். ஈசியாக உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால் வயல் நிலத்துடன் ஒரு கிணற்று பம்பு செட் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பம்பு செட்டினுடைய இன்ஜினை கழட்டி தனியாக விற்கலாம். இதை பதிவு செய்ய அவசியமில்லை.
அதுவே அந்த பம்பு செட் இருக்கும் நிலத்தை விற்கும் போது அதன் மேல் இருக்கும் பம்பு செட்டையும் விற்பனை செய்தால் அந்த இடத்தில் பம்பு செட்டும் அசையா சொத்தாக மாறிவிடுகிறது.
இப்போது ஒரு நிலம் தனியார் கம்பெனி பெயரிலோ அல்லது கூட்டு நிறுவனத்தின் பெயரிலோ உள்ளது. அப்பொழுது share-ஆக கணக்கு செய்யும் போது அந்த இடத்தில் உங்களுடைய நிலமானது அசையும் சொத்தாக மாறிவிடும். அது போன்று ஒரு கம்பெனியை முழுமையாக மூடும் போது அதிலுள்ள நிலங்கள் அனைத்தும் அசையும் சொத்தாக மாறும். அப்பொழுது அதனை ஷேர் செய்யும் போது பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் நிலமோ அல்லது நிலத்தில் இருந்து கிடைக்கும் எந்த லாபமோ அசையா சொத்துக்களை சேரும். நிலம் என்பது அசையா சொத்து தான். அதென்ன நிலத்தில் இருந்து வரும் பிற பயன்களையும் அசையா சொத்தில் சேர்க்கப்படுகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து வரும் வீட்டு வாடகை பணத்தினை வசூல் ஒரு பயன் ஆகும். நிலத்தில் இருந்து வரும் பயனையும் மதிப்பீட்டு தொகையினையும் அசையா சொத்தாக கணக்கீட்டு கொள்ளலாம்.
மேலும் அசையா சொத்து எடுத்துக்காட்டிற்கு ஒரு நிலத்தில் தின சந்தை, வார சந்தை, பொது கூட்டம், கட்சி கூட்டம், சரக்கஸ், கண்காட்சி, பொருட்காட்சி போன்றவைகளை நடத்துவதற்கான உரிமை மற்றும் அதிலிருந்து வரும் வருமானம் அசையா சொத்தாக கணக்கிடப்படுகிறது.
அசையும் சொத்தானது நிலத்தில் எப்போதும் நிரந்தரமாக சேர்ந்து இருக்காது. நிலத்தில் அறுத்து எடுக்கப்படும் பயிர்கள், புல் போன்ற அனைத்து வகைகளும் அசையும் சொத்தாகும். அதனால் நிலத்தில் இருந்து வரும் பயன்கள், பழங்கள் அதன் சாறுகள், காய்கள், இலைகள் போன்றவை எல்லாம் அசையும் சொத்தாக கணக்கிடப்படுகிறது. இது போன்ற சொத்தினை பதிவு செய்யாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.
இப்படி அசையும் சொத்து எது? அசையா சொத்து எது? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் எதனை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்ற துல்லியமான விவரம் நமக்கு கிடைக்கும்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்…🙏🙏🙏
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |