டேட்டா என்ட்ரி என்றால் என்ன? | What is Data Entry in Tamil

What is Data Entry in Tamil

டேட்டா என்ட்ரி என்றால் என்ன? | What is Data Entry in Tamil?

ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பலருக்கு இருக்கிறது. ஆன்லைன் ஜாப் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது டேட்டா என்ட்ரி ஜாப் தான். நீங்கள் ஒரு இல்லத்தரசி, ஒரு மாணவர், ஓய்வு பெற்ற நபர், வேலைக்காக காத்திருப்பவர், பார்ட் டைமாக வேலை செய்ய விரும்புபவர்கள், ஒய்வு நேரங்களை கூட பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைவருக்குமே டேட்டா என்ட்ரி சிறந்த ஒன்றாகும். இருப்பினும் டேட்டா என்ட்ரி சார்ந்த ஆன்லைன் வேலைகளை செய்வதற்கு உங்களுக்கு ஓரளவு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும், அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உங்களிடம் சொந்தமாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் இருக்க வேண்டும். சரி இந்த பதிவில் டேட்டா என்ட்ரி என்றால் என்ன? என்பதை பற்றி படித்தறியலாம்.

What is Data Entry in Tamil?

டேட்டா என்ட்ரி வேலை என்பது முற்றிலும் வேறுபட்டவை. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்று இரண்டு வகை உள்ளது. இந்த இரண்டு வகைகளிலும் பலவகையான டேட்டா என்ட்ரி ஜாப் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான டேட்டா என்ட்ரி ஜாபிற்கும் ஒவ்வொரு விதமான ஊதியம் வழங்கப்படும். ஆகவே நீங்கள் தேர்வு செய்யும் பணியை பொறுத்து உங்களுக்கு வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படும். டேட்டா என்ட்ரி வேலை பொறுத்தவரை உங்களுக்கு ஒரு ரெபரென்ஸ் வழங்கப்படும், அதை பார்த்து நீங்கள் டேட்டா தாயர் செய்து கொடுக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஜாப்ஸ் பயன்கள்:

  1. இது ஒரு பகுதி நேர வேலையாகும்.
  2. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணிபுரிந்து அதிகளவு சம்பாதிக்கலாம்.
  3. உங்களுடைய பணிகளை நீங்கள் எந்த நேரத்திலும், எந்த நாளிலும் செய்து கொடுக்கலாம்.
  4. முன்னனுபவம் எதுவும் தேவை இல்லை.

டேட்டா என்ட்ரி ஜாப்ஸ் குறைகள்:

  1. டேட்டா என்ட்ரி ஜாப்ஸ் பொறுத்தவரை பகல் நேரங்களில் பணிபுரிபவர்களை விட, இரவு நேரங்களில் பணிபுரிபவர்களுக்கே ஊதியம் அதிமாக கிடைக்கும்.
  2. பகல் நேரத்தை பொறுத்தவரை செர்வர்கள் கொஞ்சம் மெதுவாகவே இயங்குகின்றது.
  3. டேட்டா என்ட்ரி ஜாப்ஸ் வழங்கும் நிறுவனங்களில் நல்ல நம்பிக்கையுரிய நிறுவனங்களும் இருக்கும், அதேபோல் வேலைகளை அதிகம் வாங்கிக்கொண்டு ஊதியம் வழங்க அதிகம் தாமதம் செய்யும் நிறுவனங்களும் இருக்கும்.

டேட்டா என்ட்ரி ஜாப்ஸ் வகைகள் | 15 Types of Data Entry Jobs (Online & Offline):

  1. Plain Data Entry Jobs
  2. Other Basic Typing Jobs
  3. Word Processor or Typist
  4. Cleaning of Data
  5. Online Form Filling
  6. Online Survey Job
  7. Captcha Entry Jobs
  8. Copy & Paste Jobs
  9. Captioning
  10. Re Formatting and Correction
  11. Formatting and Editing Job
  12. Image to Text Data Entry
  13. Audio to Text
  14. Medical Transcriptionist
  15. Medical Coding

இதுபோன்று பலவகையான Data Entry Jobs இருக்கிறது, அவற்றில் உங்களுக்கு பிடித்த ஜாப்ஸை தேர்வு செய்து பணிபுரியலாம். பொதுவாக டேட்டா என்ட்ரி வேலையை வழங்குவது வெளிநாட்டுகாரங்க. அதனால் நம்ம ஊர் பணமா அதாவது ரூபாயா கிடைக்காது. எல்லாம் அமெரிக்க டாலர் தான். இதற்காக கவலைப்பட வேண்டாம். அதற்கும் ஒரு வழி உள்ளது. முதலில் டாலர்லயே சம்பாதிப்போம். அதற்கு பின் இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil