திருமணத்திற்கு பின்பு பெண்கள் மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்..!

after marriage avoid mistakes womens in tamil

 திருமணத்திற்கு பின்பு பெண்கள் 

வணக்கம் நண்பர்களே..! திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான சடங்கு. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்றால் ஆயிரங்காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அத்தகைய திருமணத்தில் ஆண், பெண் இருவருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதன் படி திருமணம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மறந்தும் கூட செய்ய கூடாது. ஒருவேளை அந்த விஷத்தை தெரியாமல் செய்தால்இது கூட தெரியவில்லையா என்று சுற்றி இருப்பவர்கள் கேட்பார்கள். அப்படி என்ன விஷயம் செய்ய கூடாது என்று யோசிக்க வேண்டாம். இந்த பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பெண்கள் திருமணத்திற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

திருமணதிற்கு பின்பு பெண்கள் செய்யக்கூடாதவை:

திருமணம் முடிந்த பிறகு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது. ஒருவேளை அப்படி அந்த தவறுகளை செய்தால் என்ன  நடக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

கழுத்தில் தாலி:

திருமணம் ஆன பெண்கள் கழுத்தில் தாலி இருப்பது பொதுவான ஒன்று. பெண்கள்  அந்த தாலியை செயின் அல்லது மஞ்சள் கயிறில் அணிந்து இருப்பார்கள். அந்த தாலியில் சில பொருட்கள் சேர்த்து கோர்த்து போட்டு இருப்பார்கள்.

அத்தகைய தாலியுடன் ஊக்கு போன்ற இரும்பு பொருட்களை மறந்தும் கூட சேர்த்து போட்டு கொள்ளாதீர்கள். ஊக்கு போன்ற பொருட்களை சேர்த்து போட்டு கொள்ளும்போது பெண்களுக்கு பொறுமை இருக்காது என்று சொல்வார்கள்.

காலில் மெட்டி அணிவது:

திருமணம் முடிந்த பிறகு அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அந்த பழக்கத்தின் படி பெண்கள் மெட்டி அணிவார்கள். அந்த மெட்டி ஒரு பெண்ணுக்கு மங்கலத்தையும், பெருமையும் கொடுக்கிறது. அதுபோல அந்த மெட்டியை பெண்கள் காலில் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணிவார்கள்.

அறிவியல் ரீதியாக கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. அதனால் பெண்கள் அந்த மெட்டியை அணிந்து கொண்டு காலை அழுத்தி நடப்பதன் மூலம் கருப்பை வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் மெட்டியை தேயாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பெண்கள் இரவில் தூங்கும் போது:

பெண்கள் இரவில் தூங்கும் போது தலையில் இரும்பு சம்மந்தப்பட்ட ஹேர்ப்பின், கிளிப் இதுபோன்ற பொருட்கள் இருந்தால் அதனை எடுத்து விட்டு தூங்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் மன அழுத்தம் இல்லாமல் இரவில் நிம்மதியான தூக்கத்தை தூங்க முடியும்.

அதுபோல பெண்கள் வீட்டில் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வைத்து வேலை பார்க்கும் போது தெற்கு திசையில் அமர்ந்து வேலை பார்க்க கூடாது. மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமர்ந்து வேலை பார்க்கலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil