ரயிலில் பச்சை கொடி காட்டுவது யார்..?
இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் இன்றும் இரயில்களில் ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் என்று இன்றும் பலருக்கு தெரியவில்லை. இன்றும் பலருக்கு இந்த கேள்வி இருக்கும். ஸ்டேஷனிலிருந்தோ அல்லது ரயில்வே கேட்டை கடக்கும் போதோ அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது ஸ்டேஷனில் பணியாற்றுபவர்கள் மற்றும் ரயிலில் உள்ள என்ஜின் டிரைவர் பச்சைக்கொடி காட்டுவார்கள். இது பல காலமாக பின் பற்றி வருகிறது. ஆனால் எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருந்தாலும் பச்சைக் கொடி காட்டுவது மட்டும் இன்றும் மாறவில்லை.
இந்தியாவின் மிக முக்கியமான துறைகளில் ரயில்வே போக்குவரத்து துறை முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் தினமும் பல்வேறு மக்கள் பயணம் செய்கிறார்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்வதற்கு மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். ரயிலை இயக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ரயிலை இயக்க முடியும். எனவே இந்தியாவில் அதிகம் ஊழியர்கள் உள்ள இடம் ரயில்வே துறை மட்டுமே. ரயில்வே துறையில் காரணம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் பச்சை கொடியை ஏன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா வாங்க அதனை முழுமையாக படித்து தெரிந்துகொவோம்.
சென்னை புறநகர் ரயில் நேரங்கள் |
பச்சைக் கொடி காட்ட காரணம்?
ரயிலில் என்ஜின் ட்ரைவர் ரயில் புறப்படும் போதும் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் பச்சைக் கொடியை காட்டுவார்கள். ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது பாயிண்ட்மேன்களும் பச்சைக் கொடி காட்டுவார்கள். இதை நாம் சிறு வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறோம்.
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு ரயில் புறப்படுவதை தெரிவிக்கவும், ஸ்டேஷன் மாஸ்டர் அந்த ரயில் கடந்து செல்ல அனுமதிப்பதற்காகவும் பச்சைக் கொடி காட்டப்படுகிறது. ரயில்வே சிக்னல் என்ற விஷயம் வருவதற்கு முன்பே இந்த பச்சைக் கொடி காட்டும் வழக்கம் கொண்டு வரப்பட்டது . எவ்வளவோ தொழில்நுட்ப வசதி இருந்தாலும் தொடர்ந்து பச்சைக் கொடி காட்டுவதன் மூலம் சில தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
அதிகமாக ரயில்கள் இரவிலும் இயக்கபடுகின்றன. இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில் ஓட்டுனர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து ரயிலை இயக்க வேண்டும். ரயில் ஸ்டேஷனை கடந்து செல்லும் பொழுது ஸ்டேஷன் ஊழியர் பச்சைக் கொடியை அசைப்பார் அதே சமயம் ரயிலில் உள்ள டிரைவரும் பச்சைக் கொடியை அசைப்பார். இதனால் ரயிலில் டிரைவர் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.
ரயில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது தெரியுமா?
ரயிலில் பச்சை கொடி காட்டுவதன் முக்கியத்துவம்:
ஒருவேளை ரயிலில் உள்ள டிரைவர் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால் ஸ்டேஷன் மாஸ்டர் அங்கு ஏதோ தவறு என்பதை அறிந்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் அறிந்த பின் அவர்கள் ரயில் ஓட்டுனரை தொடர்பு கொண்டு அவர்கள் அங்கு என்ன பிரச்சனை என்று அறிந்து பின் எச்சரிக்கையாக இருப்பதை உறுதி செய்வார்கள். அதே போல் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால் உடனே ரயிலில் உள்ள ட்ரைவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் ஸ்டேஷனில் என்ன பிரச்சனை என்பதை ரயில்வே போலீசார் அறிந்து காரணம் கூறவேண்டும்.
ரயில்கள் நேரம் | ரயில் நேர அட்டவணை 2022 |
இந்த ஒரு விஷயத்திற்காக தான் எவ்வளவோ தொழில்நுட்பம் கொண்டுவரபட்டிருந்தாலும் ரயிலில் பச்சைக் கொடி காட்டும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |