விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?

why airplanes colour is white in tamil

விமானம் என்றால் என்ன.?

நாம் அன்றாட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்க்கிறோம். ஆனால் நாம் பார்த்து விட்டு அதை கடந்து சென்று விடுவோம். அதை பற்றி சிந்திப்பதே இல்லை. ஒரு பொருளை பார்த்துவிட்டு அப்படியே செல்லாமல் அதை கொஞ்சம் யோசித்தோம் என்றால் தோற்றம், நிறம் எல்லாம் கேள்வியாக இருக்கும். அந்த வகையில் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது.

சில நபர்கள் அதில் விமானத்தில் சென்று இருப்போம். அந்த வகையில் விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது என்று யோசித்துள்ளீர்களா.! அப்படி யோசித்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுதாக படித்து விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

விமானம் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்க காரணம்:

why airplanes colour is white in tamil

 வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவான வெப்பத்தை உள் வாங்குகிறது. அதனால் விமானம் மேலே செல்லும் போது அதிகப்படியான வெப்பம் காணப்படும். அப்போது வெப்பத்தை உறிஞ்சி வெளிவிட வேண்டும். வெள்ளை நிறம் வெப்பத்தை தடுத்து குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. அதனால் தான் விமானத்திற்கு வெள்ளை நிறத்தை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.  

இதையும் படியுங்கள் ⇒ வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்களா..? ஆச்சிரியமாக இருக்கே ..!

பணத்தை சேமிக்கின்றது:

விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் விமான தயாரிப்பாளர்களும் பயனடைகிறார்கள். வெள்ளை நிறம் வெயிலில் பட்டாலும் கலர் மாறாது. மற்ற நிறங்கள் வெயிலில் பட்டால் வெளுத்துவிடும். அதனால் அடிக்கடி பெயிண்ட் அடிக்கும் நிலை ஏற்படும்.

ஒரு விமானத்தை ஒரு தடவை பெயிண்ட் அடிப்பதற்கு 3 லட்சம் செலவாகுமாம். அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் பெயிண்ட் அடிக்கும் செலவு மிச்சப்படுகிறது.

வெள்ளை நிறத்தில் விமானம் இருப்பதால் அதில் ஏதும் கீறல்கள், விரிசல்கள் இருந்தால் தெரியும். மேலும் வெள்ளை விமானத்தில் எரிபொருள் கசிவு இருந்தால் உடனே தெரிந்து விடும். அதனால் உடனே கண்டறிந்து விபத்துகளை தவிர்க்க முடியும். அதுவே மற்ற நிறத்தில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது. 

மேல் கூறப்பட்டுள்ள காரணத்தினால் தான் விமானம் வெள்ளை நிறம் மட்டும் இருக்கிறது.

இதையும் படியுங்கள் ⇒ விமானம் மேல் செல்லும் போது டார்ச் அடித்தால் பைலட்டுக்கு கண் கூசுமாம்..! இது யாருக்கு தெரியும்..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil