Keyboard-ல ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை காரணம் தெரியுமா..?

Advertisement

Keyboard Alphabetical Order in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் போனில் இருந்து Computer வரை அனைத்திலும் Keyboard இருக்கிறது. நாம் அனைவருமே Computer மற்றும் Labtop போன்றவற்றை பயன்படுத்தி இருப்போம். அதில் இருக்கும் Letters எல்லாம் வரிசையாக இல்லாமல் இடம் மாறி இருக்கும். ஏன் அப்படி இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..!

Keyboard -ல் ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை..? 

Keyboard Alphabetical Order in Tamil

இன்றைய நிலையில் அனைவருக்குமே Keyboard பயன்படுத்த தெரியும். நாம் பயன்படுத்தும் Keyboard -இல் இருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வரிசையாக இல்லாமல் இடம் மாறி இருக்கும். அதை நாம் கவனித்திருப்போம்.

விசைப்பலகை வருவதற்கு முன் தட்டச்சு இயந்திரம் தான் கண்டு பிடிக்கப்பட்டது. இதை 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிறிஸ்டோபர் எல் சோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த  தட்டச்சு இயந்திரம் ஆரம்ப காலத்தில் வரிசையான எழுத்துக்களை கொண்டு தான் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இந்த தட்டச்சு இயந்திரத்தை அதி வேகமாக பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் ஒன்றன் மீது ஓன்று மோதி இயந்திரத்தை பழுதடைய செய்தன.  

இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வரிசையாக இருக்கும் எழுத்துக்களை முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்தனர். 

அதேபோல கணினி கண்டுபிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் Keyboard -ல் ABCD என்ற எழுத்துக்கள் வரிசையாக தான் உருவாக்கப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் மக்களும் அதை வேகமாக பயன்படுத்தி வந்ததால் Keyboard -க்கு பதிலாக Computer -ல் பாதிப்பு ஏற்பட்டது. 

இதை தடுப்பதற்காக தான் Keyboard -ல் இருக்கும் எழுத்துக்களை வேற வேற இடத்தில் மாற்றி உருவாக்கினார்கள்.

அதுவும் நாம் அதிகமாக பயன்படுத்தும் எழுத்துக்களை சுண்டு விரலாலும், குறைவாக பயன்படுத்த கூடிய எழுத்துக்களை நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரலாலும் பயன்படுத்தும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

கம்பியூட்டருக்கும் எந்த பாதிப்பும் வர கூடாது. Keyboard -க்கும் எந்த பாதிப்பும் வர கூடாது என்ற நோக்கத்தில் தான் எழுத்துக்களை இடம் மாற்றி உருவாக்கியுள்ளனர்.

இதுவே Keyboard -ல் இருக்கும் எழுத்துக்கள் வரிசையாக இல்லாததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கீ போர்டு தமிழ் சொல் | Keyboard in Tamil

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement