Why Lawyers Wear Black Coat in Tamil
இன்றைய பதிவின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீதிபதி, வக்கீல் இவர்கள் கருப்பு நிற உடை அணிந்திருப்பதை நாம் நேரிலும், படத்திலும் பார்த்திருப்போம். ஏன் அவர்கள் கருப்பு நிற உடை அணிகிறார்கள் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்வோம்.
லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..? |
அடிப்படை காரணம்:
கருப்பு நிற ஆடை வலிமை, அதிகாரம், பணிவு இவை மூன்றையும் குறிக்கிறது என்று சொல்லப்படுகிறது. வக்கீல்கள் நீதிக்காக பணிந்து செல்ல வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிக்கும் வக்கீல்களுக்கும் கருப்பு நிற ஆடை வழங்கப்பட்டது.
மேலும், கருப்பு நிறத்தில் வெள்ளையை தவிர வேற எந்த நிறத்திலும் எழுத முடியாது. அதுபோல நீதிபதியின் முடிவே இறுதி முடிவு. எந்த சூழ்நிலையிலும் அதை மாற்ற முடியாது என்ற காரணமும் இருக்கிறது.
இதை கருப்பு கோட் அணிவதற்கான அடிப்படை காரணம் என்று சொன்னாலும் இதன் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா..? |
வக்கீல்கள் ஏன் Black Coat அணிகிறார்கள்..?
எட்வர்ட் III என்பவர் தான் 1327 ஆம் ஆண்டில் வக்கீல் தொழிலை தொடக்கினார். அவர் தொடங்கிய நீதிமன்றத்தில் தங்க சிவப்பு ஆடைகள் மற்றும் பழுப்பு நிற ஆடைகளை தான் வக்கீல்கள் அணிந்திருந்தனர்.
அதன் பிறகு 1637 ஆம் ஆண்டில், மக்களிடம் இருந்து இவர்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கறிஞர்களின் உடைகள் மாற்றப்பட்டன. பொது மக்களிடம் இருந்து வித்தியாசமாக தோன்றுவதற்காக வழக்கறிஞர்கள் நீண்ட ஆடைகளை அணியத் தொடங்கினர்.
இந்த கருப்பு கோட் அணியும் வழக்கம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. பிரிட்டனின் ராணி மேரி அவர்கள் 1694 ஆம் ஆண்டு பெரியம்மை நோயால் இறந்தார்.
அப்போது அவரது கணவர் கிங் வில்லியம்ஸ் அவர்கள் அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் துக்கம் விசாரிக்க கருப்பு கவுன்களில் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த நிகழ்வு தான் இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது.
இந்த உத்தரவு பின்னர் ரத்து செய்யப்படாமல் தொடர்ந்தது. இதுவே வழக்கறிஞர்கள் கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என்ற நடைமுறைக்கு வழி வகுத்தது என்று சொல்லப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |