உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

yoga mudra asana

விரல்களை மடக்கி வியாதிகளை விரட்டலாம் – யோக முத்திரையின் அதிசயம் ஆனால் உண்மை..! Yoga Mudra Asana Benefits in Tamil..!

நாம் அறிந்த இந்த பிரபஞ்சம் நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களால் ஆனது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமான நம் உடல் இந்த பஞ்ச பூதங்களால் ஆனவையே. நமது ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களை குறிக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நமது கட்டை விரல் நெருப்பையும், சுட்டு விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கிறது.

தினமும் நமது விரல்களை பயன்படுத்தி காலையில் 20 நிமிடங்கள் யோக முத்திரை செய்யும்பொழுது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிகழும். ஒவ்வொரு யோக முத்திரையும் ஒவ்வொரு ஆரோக்கிய பயன்களை அளிக்கின்றது. அந்த வகையில் இந்தப்பதிவில் சில யோக முத்திரைகள் மற்றும் அதன் பயன்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

யோகா வகைகள் மற்றும் பயன்கள்..!

யோக முத்திரைகள் பயன்கள்..! Gyan mudra benefits in tamil

ஆதி முத்திரை செய்முறை – Adi Mudra Benefits in Tamil:-

இந்த முத்திரையை செய்வதால் நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

adi mudra benefits in tamil

செய்முறை:-

விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும். இப்போது நமது கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து, மற்ற நான்கு விரல்களையும் கட்டை விரலுக்கு மேல் மூடி வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இந்நிலையில் இருகைகளிலும் செய்யவும். பத்து நிமிடங்கள் இவ்வாறு செய்யவும்.

ஆதி முத்திரை பலன்கள் – Adi Mudra Benefits in Tamil:-

உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும். உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

க்யான் முத்திரை செய்முறை (Gyan Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-

தினமும் காலை எழுந்தவுடன் அல்லது நேரம் கிடைக்கும் போது இந்த யோக முத்திரையை செய்து வருவதன் மூலம் அதிகம் கோபம் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம். இந்த யோக முத்திரை அறிவுவையும் ஒருமுறைப்படுத்தலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை என்று சொல்லலாம்.

gyan mudra

Gyan mudra benefits in tamil – செய்முறை:-

விரிப்பில் பத்மாசனம் தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. தங்களுடைய ஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட வேண்டும். இந்த நிலையில் அமர்ந்திருந்து 20 நிமிடங்கள் செய்யுங்கள். போகப்போக நேரத்தின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-

இந்த முத்திரை உங்கள் அறிவு திறனை மேம்படுத்தும், தூக்கமினையை போக்கும், குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்தும் முத்திரையாகும்.

வாயு முத்திரை செய்முறை (Vayu Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-

வாயு தொல்லையால் அவஸ்த்தைப்படுபவர்கள் இந்த வாயு முத்திரையை தினமும் செய்து வருவதன் மூலம் வாயு தொல்லை நீங்கும்.

vayu mudra benefits in tamil

 

செய்முறை:-

ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-

மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ஸ்பாண்டிலோஸீஸ் போன்றவற்றினால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்ந்து செய்வதன் மூலம் முழு பயன் கிடைக்கும். வாயு பிரச்சனை உள்ளவராகில் இந்த யோக முத்திரையை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

நடைப்பயிற்சி நன்மை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

அக்னி முத்திரை செய்முறை (Agni Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அக்னி முத்திரையை தொடர்ந்து செய்து வரலாம். ஏனெனில் இந்த அக்னி முத்திரை உடல் உள்ள கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.

agni mudra benefits in tamil

செய்முறை:-

கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-

அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.

வருண முத்திரை செய்முறை (Varun Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள் :-

Varun Mudra Benefits in Tamil – வருண முத்திரை நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.

varun mudra benefits in tamil

Varun Mudra Benefits in Tamil – செய்முறை:-

சுகாசனம் அல்லது வஜ்ராசனத்தில் கண்களை மூடி நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். சுண்டு விரல், கட்டை விரல் நுனியை இணைத்து மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும். இரு கைகளிலும் செய்யுங்கள். (உதாரணத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்) இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள். பின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளுங்கள். காலை, மதியம், மாலை சாப்பிடும் முன்பு இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையை ஒரு நாளில் சுகர் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்தே பத்து முறை என இரண்டு நிமிடம் இரண்டு நிமிடமாக பயிற்சி செய்யலாம்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-

21 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஏதாவது இரண்டை எடுத்துக்கொள்ளுகள். உடலுக்கு ஒரு நல்ல ஓய்வு கொடுங்கள். முத்திரை நமது உடம்பில் உள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்கவல்லது.

மனதில் அமைதியைத் தரவல்லது. அதுவும் “வருண முத்திரை” நிச்சயம் சுகரை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

பிராண முத்திரை செய்முறை (Prana Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-

இந்த பிராண முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும். இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

prana mudra benefits in tamil

செய்முறை:-

சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

வந்த பிராண முத்திரை செய்யும்பொழுது கை நடுக்கம் வந்தால் பயிற்சி செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள். இந்த கை நடுக்கம் உடலில் அதிகம் பிராண சக்தி அதிகரிப்பதை உணர்த்துகிறது. அறவே அதீத இயக்கம் உள்ளவர்கள் இந்த பிராண முத்திரை செய்வதை தவிர்த்து கொள்ளவும்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-

இந்த பிராண முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்து வர, உடலில் உயிர் சக்தி அதிகரிக்கும். உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலியால் அவஸ்த்தைப்படுபவர்கள் இந்த பிராண முத்திரையை செய்து உடல் வலியை குணமாக்கலாம்.

கண்ணாடி அணித்திருப்பவர்கள் தொடர்ந்து 40 நிமிடங்கள் மூன்று மாதங்கள் வரை இந்த முத்திரையை செய்து வர கண் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil